ஒன்றியம் என்னும் சொல் ஏன் கசக்கிறது - குமட்டுகிறது? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 26, 2021

ஒன்றியம் என்னும் சொல் ஏன் கசக்கிறது - குமட்டுகிறது?

எல்லாமே சமஸ்கிருதத்தில் இருக்கும் போது ஒன்றியம் என்ற அழகிய தமிழ்ச்சொல் அவர்களுக்கு கசக்கத்தானே செய்யும்

'மத்ய' என்பது சமஸ்கிருதச் சொல் ஆகும். அதையே தமிழில் மத்திய அரசு என்று சொல்வது அவர்களுக்கு இனிக்கிறது, ஆனால் தமிழில் அதை ஒன்றியம் என்று அரசமைப்புச்சட்டத்தின் படி கூறும் போது கசக்கிறது.

 பி.ஜே.பி. ஆட்சி என்றாலும் உண்மையில் நடப்பது ஆர்.எஸ்.எஸ். ஆட்சியே! அரசு அறிவிக்கும் திட்டங்களுக்கு எல்லாம் சமஸ்கிருத - இந்திமொழி பெயர்களே! இந்தி - சமஸ்கிருதக் குடும்பத்தைச் சார்ந்ததுதானே!

2014ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை மோடி அரசின் திட்டங்கள்

1. அடல் பென்சன் யோஜனா

2. பசத் ஊர்ஜா யோஜனா

3. தீன் தயாள் திவ்யாங் புனர்நிவாஜ் யோஜனா

4. கிராம் ஜோதி யோஜனா

5. கிராமின் பந்தனர் யோஜனா

6. ஜனனி சுரக்ஷா யோஜனா

7. யுவாஊர்ஜா யோஜனா

8.கிஷோர் வைக்யஞ்க் ப்ரொஷ்தன் யோஜனா

9. ப்ரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா

10. பிமா யோஜனா

11. ஜீவஜோதி யோஜனா

12. ஜனதன் யோஜனா

13. கிராம் சடக் யோஜனா

14. ராஷ்டிரிய கிரிஷி விகாஷ் யோஜனா

15. ராஷ்டிரிய சுவஸ்திக் விகாஷ் யோஜனா

16. ஷக்சம் யோஜனா

17. சம்பூர்ண கிராம் ரோஜ்கார் யோஜனா

18. ஸ்வபிமான் பாரதி

19. ஸ்வர்ண ஜெயந்தி கிராம்ஸ்வர் ஊர்ஜா யோஜனா

20. ஸ்வலாபமபன்

21.. உதிஷா யோஜனா

22..சுகன்யா சமருத்தியோஜனா

23. ப்ரதான் மந்திரி அவாஜ் யோஜனா

24. அந்தயோதா அன்ன யோஜனா

25. ப்ரதான் மந்திரி கவுசல் விகாஸ் யோஜனா

26. பிரதான் மந்திரி உஜவல் யோஜனா

27. ஸ்வட்ச் பாரத்

28. நயி நிவாஜ் யோஜனா

அரசின் திட்டங்களுக்கு ஏனிந்த சமஸ்கிருத, இந்திச் சொற்கள் - இந்தியா முழுவதும் இந்தச் சொற்களைப் பரவலாக்கும் நோக்கம் என்ன?

இது ஒரு வகையிலான மொழி - கலாச்சாரத் திணிப்புத்தானே!  ‘யூனியன்என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ஒன்றியம் என்பது தமிழாக்கம் என்ற புரிதல் கூட இல்¬லா? அல்லது தமிழ் என்றால்இனம்தெரிந்த வெறுப்பா?

ஆர்.எஸ்.எஸ். - அதன் துணை அமைப்புகள் அனைத்தும் சமஸ்கிருத மயமே!

ராஷ்ட்ரீய சுயம் சேவக் சங் (Rashtriya Swayamsevak Sangh)

அகில் பாரதீய பிரதிநிதி சபா (Akhil Bharathiya Praitinidhi Sabha)

சேவா பாரதி(Seva Bharati)

விசுவ ஹிந்து பரிஷத் (Viswa Hindu Parishad)

வன்பந்த்து பரிஷத் (VanBandu Parishad)

ராஷ்ட்ரீய சேவிகா சமிதி (Rashtriya Sevika Samiti)

அகில் பாரதீய வித்யார்த்தி பரிஷத் (Akhil Bharatiya Vidyarthi Parishad)

வனவாசி கல்யாண் ஆஷ்ரம் (Vanavasi Kalyan Ashram)

வித்யா பாரதி (Vidya Bharati)

பஜ்ரங்தள் (Bhajrang Dal)

மகிளா சேவாபாரதி(Mahila Sevabharati)

ஹிந்து கிசான் சேவா சங் (Hindu Kisan Sevasangh - Braathiya Kisan Sangh)

ஹிந்து விக்யான் பிரகதி மண்டல் (Hindu Vigyan Pragtati Mandal)

டேன்ட்ரிக் கலாகேந்திரா ((Tantrik Kalakendra)

ஜ்யோதிக் சிக்கான் சன்ஸ்தான் (Jyotish Shikshan Sansthan)

அகில் பாரதீய யுவ விகாஸ்சங்(Akhil Bharatiya Yuva Vikas Sangh)

அபினவ் பாரத் (Abhnav Bharat)

இந்த அமைப்புதான் சூரத் மற்றும் அஜ்மீர் குண்டு வெடிப்பில் ஈடுபட்டது.

ஹிந்து தர்ம ரக்ஷா சேனா (Hindu Dharma Raksha Sena)

நாரி ரக்ஷா சேனா (Nari Raksha Sena)

மாகங்கா சுரக்ஷா சேனா (Maa Ganga Suraskha Sena)

 இந்தவரிசையில் தான்  மத்ய என்ற சமஸ்கிருத வார்த்தையிலேயே மத்திய அரசு என்று கூறுவதை அங்குள்ளவர்கள் வலி யுறுத்த இங்குள்ள பாஜகவினர் சட்டமன்றம் வரை புலம்பித் தள்ளுகிறார்கள்.

  ஒன்றிய என்பது அழகிய தமிழ்ச் சொல், மத்திய என்பது சமஸ்கிருத சொல். தமிழில் மத்திய அரசு என்று தினமலர் வகையறாக்கள் எழுதும்நாட்டின் மத்தியில் இருப்பதால் அதனை மத்திய அரசு என்று எழுதுகிறார்களோ என்னவோ,

மத்திய” “ஒன்றியஇரண்டுக்கும் என்ன வேறுபாடு...?

மத்திய - மய்யம் - சர்வாதிகாரம்

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்பவர்களுக்கு இவை மகா கசப்புதானே - குமட்டல் தானே!

ஒன்றியம் - சமத்துவம் - மாநில உணர்வு - தனித்தன்மை  - இந்தியா ஒரு கூட்டாட்சி என்பதன் குறியீடு!

இதனால் தான் இங்குள்ள பாசிச சக்திகளுக்கு ஒன்றியம் என்ற சொல் எட்டிக்காயாக கசக்கிறது

1 comment:

  1. இது ஒரு மொழி ஆதிக்கம் என்று சுருக்கிவிடக்கூடாது. தமிழின அழித்தல் என்ற RSS திட்டத்தின் ஒரு பகுதியே இந்தி, சமஸ்கிருத மொழித்தினிப்பு. மற்றொன்று பொருளாதார ஆதிக்கம். வடவர்களின் பொருளாதார ஆதிக்கத்தை RSS ஊக்குவிக்கின்றது. அசையா சொத்துக்களை வடவர்கள் வாங்கிக் குவிக்கிறார்கள். சாகர்மாலா, எட்டுவழிச்சாலை, ஹைட்ரோகார்பன் என்பதெல்லாம் ஒரு சில உதாரணங்களே! விழித்துக்கொள் தமிழா!!

    ReplyDelete