தாக்டே புயல் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 15, 2021

தாக்டே புயல் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை,மே15- அரபிக்கடலில் உருவாகியிருக்கும் தாக்டே புயல் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். மேலும் கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மய்யம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து, அரபிக்கடலில் உருவாகியுள்ள புயல் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்து முதலமைச்சர் மு..ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இந்த ஆலோசனையில் வருவாய் பேரிடர் மேலாண்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா மற்றும் வானிலை ஆய்வு மய்யத்தின் தென் மண்டல தலைவர் பாலசந்திரன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இணை நோய் இல்லாத இளைஞர்களை அதிகம் தாக்கும் கரோனா தொற்று

திருச்சி, மே 15 தமிழகத்தில் கரோனா பாதிப்பு வரலாறு காணாத அளவுக்கு புதிய உச்சம் தொட்டு இருக்கிறது. தினமும் 30 ஆயிரம் பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டு வருகிறது.

திருச்சியில் வரும் தினசரி தொற்றாளர்களில் 32 முதல் 40 சதவீதம் பேர் 40 வயதுக்கு உட்பட்ட இளம் வயதினராக இருப்பதாக மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ராம்கணேஷ் தெரிவித்தார். தற்போது எந்த இணை நோயும் கண்டறியப்படாத பல இளைஞர்கள் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். அதே போன்று 40 வயதுக்கு உட்பட்ட பலர் அதிக எண்ணிக்கையில் கரோனாவுக்கு பலியாகியுள்ளதாகவும் மருத்துவத்துறையினர் கவலை தெரிவித்தனர்.ஆகவே தற்போதைய கரோனா வைரசின் வீரியம் மற்றும் பரவும் திறன் அதிகமாக இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

No comments:

Post a Comment