செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 28, 2021

செய்தியும், சிந்தனையும்....!

'தோள் தட்டுவோம்!'

*          உலகில் 30 மாசடைந்த நகரங்களில் 22 நகரங்கள் இந்தியாவில் உள்ளன.    

>>           அப்படி எல்லாம் சொல்லக் கூடாது - இது 'பாரத புண்ணிய பூமி!'

பரக்க பரக்க

*          சென்னையில் இரு நாட்களில் மட்டும் 3790 டன் காய்கறிகள் விற்பனை.

>>           வாகனங்கள் மூலம் வேக வேகமாக பறந்து பறந்து விற்பனையோ!

விவஸ்தை இல்லை

*           தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமர் படம் - பிரியங்கா கண்டனம்

>>           இந்தியா 'தட் ஈஸ் மோடி நாடு' ஆகிறதோ!

யாருக்குப் பிரதமர்!'

*          குஜராத்தில் மக்கள் தொகை 6.37 கோடி, தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டதோ 16.4 விழுக்காடு. தமிழ் நாட்டின் மக்கள் தொகை 8.38 கோடி. ஆனால் தடுப்பூசி ஒதுக்கப்பட்டதோ 6.4. விழுக்காடு மட்டும்!

- மா. சுப்பிரமணியன்,

மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர்     

>>           பிஜேபியைத் தோற்கடித்தால் இப்படித்தான் ஆமென்க!

குத்தல் பேச்சா?

*           எளிமையான வாழ்வுக்கு உதாரணம் மகா பெரியவர்.

- காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் 

>>           இடைப் பெரியவர் 'ஜாலி'ப் பேர்வழியோ!

எந்தஆவணம்?

*           சிறீரங்கம் கோயில் ஓலைச் சுவடிகள் ஆவணப்படுத்தும் பணி தீவிரம்

>>           துவக்கத்தில் இது புத்தக் கோயிலாக இருந்ததே!

 'கிரிக்கெட் நமஹ'

*           கால்பந்து தர வரிசையில் உலகில் இந்தியா 105ஆம் இடத்தில்!

>>           விளையாட்டில்கூட இந்தியா வில் வருணாசிரமம் உண்டே!

No comments:

Post a Comment