பெற்றோரை இழந்த 577 குழந்தைகள்; கடத்தல் முயற்சியும் நடந்த அவலம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 27, 2021

பெற்றோரை இழந்த 577 குழந்தைகள்; கடத்தல் முயற்சியும் நடந்த அவலம்

 புதுடில்லி, மே 27 கரோனாவின் 2ஆவது அலை யில் நாடு முழுவதும் 577 குழந் தைகள் பெற்றோரை இழந்து நிர்கதியாகி உள்ளனர்.

இந்தியாவில் கரோனாவின் 2ஆவது அலை தீவிர பாதிப்பு களை ஏற்படுத்தி வருகிறது.  உலக அளவில் கரோனா பாதிப்புக ளுக்கு அமெரிக்கா மற்றும் பிரே சில் ஆகிய நாடு களுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது.  இந்த வரிசையில், 3 லட்சம் உயி ரிழப்பு களை கடந்து இந்தியா 3ஆவது இடத்தில் உள்ளது.

கரோனா பெருந் தொற்றுக்கு நாடு முழுவதும் 577 குழந்தைகள் பெற்றோரை இழந்து உள்ளனர்.  இந்த குழந் தைகள் தங்களுடைய நெருங் கிய உறவினர் அல்லது பிற குடும்ப உறுப்பினர்களுடன் தற்போது வசித்து வருகின்ற னர்.

இதனை மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகத்தினரிடம் இருந்து பெற்ற தரவுகளின் அடிப் படையில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.  அவர்கள் அனைவரையும் மாநில அரசு களின் உதவியுடன் மத்திய அரசு தொடர்ச்சியாக கண் காணித்து வருகிறது.

பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் இருக்கும் குழந்தைகளை பராமரிக்க மற்றும் அவர்களின் நலனுக் காக நாடு முழுவதுமுள்ள மாவட்டத்திற்கு தலா ரூ.10 லட்சம் தொகையை அரசு விடுவித்து உள்ளது.

எனினும் சில அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் ஆதர வற்ற குழந்தைகளின் தரவில் குழப்பங்களை விளைவித்து வருவது அறிந்து மத்திய அரசு வேதனை தெரிவித்து உள்ளது.  சில குழந்தை கடத்தல் முயற்சி சம்பவங்களும் நடந்துள்ளன.  இதனைத் தொடர்ந்து காவல் துறையினரும் எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.

No comments:

Post a Comment