கோவிஷீல்டு 2ஆவது டோஸை 12-16 வார இடைவெளிக்குள் போட்டுக்கொண்டால் போதுமானது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 14, 2021

கோவிஷீல்டு 2ஆவது டோஸை 12-16 வார இடைவெளிக்குள் போட்டுக்கொண்டால் போதுமானது

புதுடில்லி, மே 14 கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸ் போட்ட பின், 12 முதல் 16 வாரங்களுக்குள் 2ஆவது டோஸ் போட்டுக்கொள்ள லாம் என நிபுணர் குழு பரிந்துரை செய்திருந்தது.

கோவிஷீல்டு 2ஆவது டோசை 12-16 வார இடைவெளிக்குள் போட்டுக் கொண்டால் போதுமானது: மத்திய சுகாதாரத்துறை அனுமதி

கோவிஷீல்டு

இந்தியாவில் கரோனாவை கட்டுப் படுத்த கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசி மருந்துகள் பயன் பாட்டில் உள்ளன. இந்த இரண்டு மருந்துகளும் 18 வயதுக்கு மேற்பட்ட வர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இரண்டு மருந்துகளும் குறிப்பிட்ட இடைவெளிக்குள் இரண்டு டோஸ்கள் செலுத்தப்படவேண்டும்.

கோவாக்சின் தடுப்பூசி மருந்தின் முதல் டோஸ் போட்டபிறகு, இரண் டாவது டோஸ் 4 வாரம் முதல் 6 வார இடைவெளிக்குள் செலுத்தப்படுகிறது. கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோசுக்கும் இரண்டாம் டோசுக்கும் உள்ள இடைவெளி 4-6 வாரமாக முதலில் பின்பற்றப்பட்டது. பிறகு இந்த இடைவெளியை 6-8 வாரமாக மாற்றி மத்திய சுகாதாரத்துறை பரிந்துரைத்தது.

இந்த நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோசுக்கும் இரண்டாம் டோசுக்கும் உள்ள இடைவெளி மீண்டும் அதிகரிக்கப்பட உள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது டோசை 12 முதல் 16 வாரங்களுக்குள் செலுத்துமாறு நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

இரண்டாவது டோஸ் 12-16 வாரங்களுக்குள் வழங்கப்பட்டால் கூடுதல் பலன் கிடைப்பதாக தெரிவிக் கப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரையை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதேபோல் கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் தடுப்பூசியைத் தேர்வு செய்ய லாம் என்றும், பிரசவத்திற்குப் பிறகு பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதி பெறுவார்கள் என்றும் தேசிய நோய்த்தடுப்பு தொழில் நுட்ப ஆலோசனைக் குழு கூறி உள்ளது.

தற்போதைய நெறிமுறைகளின் கீழ், இவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள தகுதி இல்லை.

இந்த பரிந்துரைகளானது, தடுப் பூசி நிர்வாகம் குறித்த தேசிய நிபுணர் குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். தேசிய நிபுணர் குழு ஒப்புதல் வழங்கி யதும், இந்த பரிந்துரையை மத்திய சுகாதார அமைச்சகம் பரிசீலித்து அறிவிப்பு வெளியிடும் என எதிர் பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment