அமெரிக்காவின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த புதிய திட்டம்- அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 3, 2021

அமெரிக்காவின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த புதிய திட்டம்- அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு

வாசிங்டன், ஏப். 3 அமெரிக்காவின் உள்கட்டமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு வசதிகளை மேம்படுத்த அதிபர் ஜோ பைடன் புதிய திட்டத்தை அறிவித்துள்ளார்.

கரோனா பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா உலக அளவில் முதல் இடத்தில் உள்ளது. தொற்றுநோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதே சமயம் பொருளா தாரத்தை மேம்படுத்தவும், ஜோ பைடன் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார்.

அந்த வகையில், அமெரிக்காவின் உள்கட்டமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு வசதிகளை மேம்படுத்த, சுமார் 2 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில், அதிபர் ஜோ பைடன்  புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். இது குறித்து பென்சில்வேனியாவின் பிட்ஸ்பர்க்கில் பேசிய போது ஜோ பைடன் கூறியதாவது;-

உள்கட்டமைப்பு வசதிகள், தட்பவெப்ப மாற்றம், கரோனா தொற்று போன்றவற்றால், அமெரிக்காவின் பொருளாதாரம் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அவற்றை மீண்டும் கட்ட மைக்க வேண்டியது அவசியம். அதனால், உள்கட்டமைப்பு மற் றும் பொருளாதாரத்தை மேம்படுத்த, இதுவரை இல்லாத வகை யில், 2 ட்ரில்லியன் டாலர்கள் முதலீடு செய்யும் திட்டத்தை துவக்கி யுள்ளேன். உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்தி மிக்க நாடாக, அமெரிக்கா தொடர வேண்டும் என்பது தான் என் விருப்பம்.

இந்த திட்டத்தின் மூலம் அமெரிக்காவில், வேலை வாய்ப்புகள், வரலாற்றில் இல்லாத வகையில் அதிகரிக்கும். பொருளாதாரமும் மாபெரும் வளர்ச்சி பெறும். இரண்டாம் உலகப் போர் முடிந்த பின், அமெரிக்காவில் வேலை வாய்ப்புகளை உருவாக்க, அதிக முதலீடு செய்யப்பட்டது. அதன்பின், தற்போது தான், வேலை வாய்ப்பு மற்றும் உள்கட்டமைப்புக்காக அதிக முதலீடு செய்யப்படு கிறது. இவ்வாறு அவர்கூறினார்.

No comments:

Post a Comment