விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக கனடா நாடாளுமன்றத்தில் தீர்மானம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 13, 2021

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக கனடா நாடாளுமன்றத்தில் தீர்மானம்

வான்கூவர், ஏப். 13- டில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் தீர்மானம் ஒன்று கனடா நாடாளுமன் றத்தில் நிறைவேற்றப்பட்டுள் ளது. தலைநகர் டில்லியில் விவசாயிகள் போராட்டம் நான்கு மாதங்களைக் கடந் தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 மத்திய அரசின் மூன்று புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். விவசாயிகள் போராட்டம் தொடர்பாக அமெரிக்க பாப் பாடகி ரிஹான்னா, மியா கலிஃபா, கிரெட்டா தன்பெர்க் என பல்வேறு பன்னாட்டு பிர பலங்களும் ஆதரவு தெரிவித் துள்ளனர்.

 இந்நிலையில் தற்போது மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், கனடா நாடாளுமன்றத்தில் புதிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்திய விவசாயிகளுக்கான பன்னாட்டு ஆதரவு என்ற இந்த தீர்மானத்திற்கு முக்கி யத்துவம் அளித்து கனடா நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்டது.

 இதை கனேடியன் புதிய ஜனநாயகக் கட்சி முன் மொழிந்தது. விவசாயிகள் மீது மனித உரிமை மீறல் மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களைக் கண்டிக்கும் வகையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் நட வடிக்கைகளைக் கனடா அரசு கண்டிக்க வேண்டும் என்றும் டில்லியில் விவசாயிகள் மீதான மனித உரிமை மீறல்களுக்கு எதிரான உறுதி யான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அமைதியான முறையில் போராட விவசாயிகளின் உரி மைகளைப் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

 இந்த மூன்று சட்டங்களை நிறைவேற்றி கனேடியன் புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவராக இந்திய வம்சாவ ளியைச் சேர்ந்த ஜக்மீத் சிங் உள்ளார்.

விவசாயிகள் போராட் டம் தொடர்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து தெரிவித்திருந்தார். விவசாயிகள் அமைதியான முறையில் போராட அனு மதிக்க வேண்டும் என குறிப் பிட்டிருந்தார். ஆனால் அவ ரது கருத்தை இந்தியா ரசிக்க வில்லை. இதன் காரணமாக டெல்லியிலுள்ள கனடா தூதரை நேரில் அழைத்து இந்தியா கண்டித்திருந்தது.

No comments:

Post a Comment