கழகத் தலைவரின் விழைவும், நலம் விசாரிப்பும்!

முதுபெரும் பெரியார் பெருந் தொண்டரும் கழகக் காப்பாளருமான தோழர் நெய்வேலி செயராமன் அவர்கள் கரோனா கொடுந் தொற்று காரணமாக, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதை அறிந்து, தொலைபேசி மூலம் அவரிடம் நலம் விசாரித்தார் தமிழர் தலைவர் அவர்கள் (8.4.2021)

***

பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் துணைத் தலைவர் தோழர் நாகை இல. மேகநாதன் அவர்கள் கரோனா கொடுந் தொற்றினால் பாதிக்கப்பட்டு, தஞ்சை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதைக் கேள்வியுற்று, அவரிடம் கழகத் தலைவர் நலம் விசாரித்தார். (8.4.2021)

மேற்கண்ட இருவரும் விரைவில் நலம் பெற்று தங்களது பொது வாழ்வுப் பணியைத் தொடர தனது விழைவினைத் தெரிவித்தார் கழகத் தலைவர்.

***

பிரபல திரைப்பட இயக்குநரும், சுயமரியாதைக் குடும் பத்தவரும், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களின் அண்ணனுமாகிய நண்பர் எஸ்.பி. முத்துராமன் அவர்களும் கரோனாவினால் பாதிக்கப்பட்டு, மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்து நலம் விசாரித்தார். நல்ல வண்ணம் குணமடைந்து வருவதாக பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் கழகத் தலைவரிடம் கூறினார்.

விரைவில் வீடு திரும்பி, வழமையான அவரது பணிகளை மேற்கொள்ள தனது விழைவைத் தெரிவித்தார். (8.4.2021)

Comments