நோட்டைக் கொடுத்து ஓட்டை வாங்க நினைப்போர் எண்ணத்தில் ஓட்டைதான் விழப் போகிறது!

தமிழர் தலைவர் தேர்தல் பரப்புரை

நமது சிறப்பு செய்தியாளர்


மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கம்பம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் நா.இராமகிருஷ்ணன்  அவர்களை ஆதரித்து கம்பம் பார்க் திடலில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  உரையாற்றினார்.  (1.4.2021)

 கம்பம் தொகுதி பரப்புரை

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கம்பம் தொகுதி தி.மு.. வேட்பாளர் நா.இராமகிருஷ்ணன்  அவர்களை ஆதரித்து கம்பம் பார்க் திடலில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு பொதுக்குழு உறுப்பினர் டி.பி.எஸ்.ஆர்.சனார்த்தனம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் .இரகுநாகநாதன் மாவட்ட செயலாளர் பூ.மணிகண்டண், மாவட்ட .. தலைவர் டி.பி.எஸ்.ஆர்.அரிகரன், மாவட்ட அமைப்பாளர் பாஸ்கரன், கம்பம் நகர் தலைவர் முருகன், மேனாள் மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன், ஒன்றிய தலைவர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மண்டல செயலாளர் கருப்பு சட்டை நடராசன் வரவேற்புரை வழங்கிட   கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன், கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் ஆகியோர் உரையாற்றினர்.

நிறைவாக திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் உங்களது எழுச்சியை பார்க்கும் போதே நன்றாக தெரிகிறது. இங்கே ஸ்டாலின் அலை அடிப்பது மோடிக்கும் அமித்ஷாவுக்கும் நன்றாக தெரிந்து விட்டது.

இங்கே உள்ள அடிமையாளர்கள் இறுதியாக வித்தை காட்டி மயக்கலாம் என்று நினைக்கிறார்கள். கண்டெய் னர்களை நம்பி நோட்டை கொடுத்து ஓட்டை வாங்கலாம் என்று நினைக்கிறார்கள். அவர்களது எண்ணத்தில் ஓட்டை தான் விழப் போகிறது.

இந்த பகுதி விவசாயிகள் நிறைந்த பகுதி.விவசாயிகளை வஞ்சிக்கும் அளவிற்கு மூன்று சட்டங்களை இயற்றி இருக் கிறது. குறைந்த பட்ச ஆதார விலை உண்டா? 128 நாளை கடந்து விவசாயிகள் போராடி வருகிறார்கள் டில்லியிலே! அந்தப் போராட்டத்தை தூண்டியதே பிரதமர் மோடி தானே!  மோடி வரார், ஓடி வரார், தேடி வரார் என்று சொல்கிறார்களே தமிழகத்தில் அய்ந்து புயல்கள் அடித்து நாசம் செய்ததே விவசாயிகளை. அப்போது வந்தாரா?

தேர்தல் முடிந்ததும் .தி.மு..வை மோடி 'ஸ்வாஹா' செய்யப் போகிறார். எனவே .தி.மு..வையும் மீட்க வேண்டும் என்று கருதுகிறோம். இப்போது உள்ள .தி.மு.. கம்பெனி இருக்கிறதே அது மோடி திரும்பிப் பார்த்தாலே காலில் விழுகிறது.வெட்கமாக இருக்கிறது.

.இராசா பேசியதை தவறாக திரித்து அதை பரப்பி வேறு சரக்கில்லாமல் பேசினார்கள். அவரும் வருத்தம் தெரிவித்து விட்டார். அத்தோடு முடிந்தது பிரச்சினை. ஆனால் பிரதமர்  தி.மு..ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்கிறார்; அதை யார் சொல்வது? மோடி இப்போது திடீரென்று தமிழ்மீது காதல் கொண்டு வித்தையை காட்டி வருகிறார். மக்கள் இதையெல்லாம் நம்பத் தயாரில்லை.

எனவே, மொழிப்போர் வீரர் கம்பம் நடராசன் அவர் களின் சகோதரர் கம்பம் நா.இராமகிருஷ்ணன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய் யுங்கள் என்று கேட்டு விடைபெறுகிறேன் - நன்றி வணக்கம். ‌

பரப்புரை கூட்டத்தில் தி.மு..கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாண்டியன், தி.மு. நகர பொறுப்பாளர்கள் நெப் போலியன், செல்வக்குமார், காங்கிரஸ் நகர தலைவர் போஸ், சி.பி.எம் பொறுப்பாளர்கள் லெனின், கல்யாணசுந்தரம், .யூ.மு.லீக் மாவட்ட செயலாளர் சாகுல் ஹமீது, ... மாவட்ட செயலாளர் அப்பாஸ் மந்திரி, வி.சி..நகர செய லாளர் சாகுல் ஹமீது, சேட், மாவட்ட  கழக துணைத் தலைவர் ஸ்டார் நாகராசன், மாவட்ட  கழக இளைஞரணி செயலாளர் சுருளிராசு உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர்.

மேற்கண்ட இரண்டு பரப்புரை கூட்டங்களிலும் திராவிடர் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.‌குணசேகரன், பெரியார் வீர விளையாட்டு கழக தலைவர் பேரா..சுப்பிரமணியம், அமைப்பு செயலாளர் மதுரை செல்வம், மாநில மாணவர் கழக செயலாளர் .பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர்பாண்டி, தி.என்னாரெசு பிராட்லா உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

போடிநாயக்கனூர் தொகுதி பரப்புரை

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் போடிநாயக்கனூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் தங்க. தமிழ்ச்செல்வன்  அவர்களை ஆதரித்து போடிநாயக்கனூர் திருவள்ளுவர் சிலை அருகில்  நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  உரையாற்றினார்.  (1.4.2021)

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் போடிநாயக் கனூர் தொகுதி தி.மு.. வேட்பாளர் தங்க. தமிழ்ச்செல்வனை ஆதரித்து போடிநாயக்கனூர் திருவள்ளுவர் சிலை அருகில்  நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் .ரகுநாகநாதன் தலைமை வகித்தார்.மாவட்ட இளைஞரணி தலைவர் .சுருளிராசு வரவேற்புரை வழங்கிட போடிநாயக்கனூர் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் லெட்சுமணன், தி.மு..நகர செயலாளர் செல்வராசு, மாவட்ட  கழக செயலாளர் மணிகண்டன், மாவட்ட துணை தலைவர் ஸ்டார் நாகராசன், பொதுக்குழு உறுப்பினர் டி.பி.எஸ்.ஆர்.சனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன், திராவிடர் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் ஆகியோர் உரைக்குப் பின் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில்

இன்றைய தினம் போடிநாயக்கனூர் தொகுதியில் நமது தங்க தமிழ்ச்செல்வன் அவர்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் வரலாற்றை மாற்றக் கூடிய அளவிற்கு இந்த தொகுதியின் பங்களிப்பு இருக்கப் போகிறது. இந்த தொகுதிக்கு ஒரு பெரிய வரலாறு உண்டு. டில்லியில் உள்ள மோடிக்கு சேவகம் செய்யக்கூடிய அள விற்கு ஆட்சியை மாற்றி விட்டனர்.

சுதந்திரமான ஆட்சியாகவும் இல்லை. கொள்ளையடிப் பதை லட்சியமாக கொண்டு சீரழித்து விட்டு இப்போது அந்த பணத்தை நம்பி இறங்கியுள்ளனர்.மக்கள் தெளிவாக உள்ளனர்‌. ஆம்புலன்சில் நோயாளியை படுக்க வைத்த காலம் போய் நோட்டுக்கட்டை படுக்க வைத்து சாதனை படைத்தவர்கள்.

நாம் எல்லோரும் அண்ணன் தம்பிகளாக அந்த காலத்திலேயே 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று சொல்லக்கூடிய அளவிற்கு இருந்து வருகிறோம். அதை அடியோடு ஒழிக்க முயற்சி நடக்கிறது.

தடுப்பூசியை இரண்டு முறை போட வேண்டும்.2019இல் முதல் தடுப்பூசியை போட்டு விட்டோம். அதில் இந்த தொகு தியில் தான் கொஞ்சம் தவறி விட்டது. அதை இந்த முறை சரிசெய்ய வேண்டிய அவசியம் உங்களுக்கு உள்ளது. அண்ணாவின் பெயரில் கட்சி வைத்துக் கொண்டு அண்ணாவையும் காணோம். அம்மா வையும் காணோம். எம்.ஜி.ஆரையும் காணோம். கட்சியைக் கொண்டு போய் டில்லியில் அடகு வைத்து விட்டார்களே!

நமது துணை முதல்வர் சிறீமான் தர்மயுத்தம் ஒரு படி மேலே போய் இன்னும் வேகமாக விழுந்து கிடக்கிறாரே! அம்மாவின் விசுவாசி இப்போது மோடியின் விசுவாசி ஆகிவிட்டார்.உங்களையும் சேர்த்து மீட்க வேண் டும் என்று பேசுகிறோம்..

இப்போது தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளது.

அவர்களது கூட்டணி. வட்டி விகிதம் குறைத்து அறிவிப்பு விட்டுவிட்டு மறுநாளே திரும்ப பெற்று விட்டார்கள். (த்)தை தின்றால் பித்தம் தெளியும் என்ற அளவிற்கு வந்து விட்டார்கள். முதல் முதலாக பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய நீதிக்கட்சி ஆட்சியின் நூறாவது ஆண்டு இன்று தான். கல்வியில் நீட் தேர்வு வந்தது போல் வேலை வாய்ப்புகளிலும் 'நீட்' தேர்வு கொண்டு வருவோம் என்று பா... தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையெல்லாம் புரிந்து கொண்டு உங்கள் தொகுதியின் வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் அவர்களை உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள் என்று கேட்டு விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.

பரப்புரைக் கூட்டத்தில் கழகப் பொதுக்குழு உறுப்பினர் மு.அன்புக்கரசன், போடி நகர் தலைவர் பெரியார்லெனின், பொதுக்குழு உறுப்பினர் பேபி சாந்தா தேவி, காங்கிரஸ் கட்சி தலைவர் முசாக்மந்திரி, காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சன்னாசி, .தி.மு.. நகர செயலாளர் செல்வம், வி.சி..நகர செய லாளர் மோகன், ..பேரவை நகர் செயலாளர் மாவீரன் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர். முடிவில் போடிநாயக்கனூர் நகர் செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.

Comments