அண்ணா சிலைக்குத் தீ வைப்பு!

அண்ணா தி.மு.. ஆட்சியில் தொடரும் அவமதிப்பு

தமிழர் தலைவர் கண்டனம்

 கல்லக்குறிச்சி மாவட்டம் கச்சிராபாளையம் அருகில் உள்ள மாதவச்சேரியில் உள்ள அறிஞர் அண்ணாவின் சிலைக்கு நேற்று  (1.4.2021) நள்ளிரவில் தீ வைக்கப்பட்டுள்ளது. மக்கள் போற்றும் மரியாதைக்குரிய தலைவர்களின் சிலைகளுக்குத் தீ வைப்பது, செருப்பு மாலை போடுவது, காவி சாயம் பூசுவது என்பதற்கென்றே ஒரு கும்பலைத் தயார் செய்து வைத்திருப்பவர்கள் யார் என்று நாட்டு மக்களுக்கும், குறிப்பாகக் காவல் துறையின் உளவுத் துறைக்கும் தெரிந்ததுதான்.

யாரையோ திருப்திப்படுத்த இந்தக் கயவர்கள்மீது அதிமுக அரசு நடவடிக்கை எடுப்பதில்லை. கேட்டால், இவற்றைச் செய்த ஆசாமி மனநோயாளி என்று கூறிக் கோப்பை முடித்து விடுவது இவர்களின் வாடிக்கையாகும்.

இதற்கெல்லாம் முடிதான் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி! வட்டியும் முதலுமாக நாட்டு மக்கள் பாடம் கற்பிப்பார்கள். எச்சரிக்கை!

 

 கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

Comments