அன்புடன் வேண்டுகிறோம்!

கழக உறவுகளே,

பகுத்தறிவாளர்களே,

தமிழ் அன்பர்களே,

கரோனா கொடுந்தொற்றின் பயங்கரம் மீண்டும் ‘‘பெருஉரு'' கொள்கிறது.

தடுப்பு ஊசி போட்டவர்களாயினும்கூட, அவர்கள் முகக்கவசம் அணியாமல் எவரிடத்திலும் பேசக்கூடாது.

முகக்கவசம் நமது உயிர்க் கவசம்' என்பதை ஒவ்வொருவருக்கும் உணர்த்துங்கள்; அலட்சியம் வேண்டாம்.

சோப்புப் போட்டு அடிக்கடி கைகழுவுதல் அவசியம்.

கிருமி நாசினி (சானிடைசர்) மூலம் அடிக்கடி கைகளை, கைப்படும் பொருள்கள்மீதும் பயன்படுத்துங்கள்.

கபசுரக் குடிநீர் முதல்சி' வைட்டமின் மாத்திரை முதலிய நோய் எதிர்ப்பு சக்திப் பெருக்கத்திற்கான வழிவகை - உணவு ஊட்டச்சத்து, மறவாதீர்!

கழகப் பிரச்சாரங்கள் - கொள்கை விளக்கங்கள் இவற்றை மீண்டும் காணொலிமூலம் கடமையாற்ற ஆங்காங்கு ஏற்பாடு செய்யுங்கள்.

தேவையின்றி வெளியே நடமாட்டத்தையோ, வெளியிடங்களில் உண்ணவோ, நெருங்கி நின்று உரையாடுதலையோ, சந்திப்புக்களையோ தவிர்த்திடுங்கள்!

தனிமை இனிமை தரும்' என்றாக்கி,

உங்களையும் பாதுகாத்து - மற்றவர்களையும் காப்பாற்ற உதவுங்கள்!

தொண்டறப் பணிகளும் தொடரட்டும்!

 

கி.வீரமணி,

தலைவர்

திராவிடர் கழகம்.

சென்னை 

11.4.2021

Comments