கோவிஷீல்ட் தடுப்பூசியின் 2ஆவது முறை 90 நாட்களுக்குள் செலுத்திக் கொண்டால் பலன் தரும்

மும்பை, ஏப். 7- கரோனா வைரஸுக்கு எதிராக இந்தி யாவில் இரு தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்பட்டு நடைமுறை யில் இருக்கின்றன. அய்சி எம்ஆர், பாரத் பயோடெக் நிறுவனம் சார்பில் கோவாக் சின் மருந்தும், அஸ்ட்ரா ஜென்கா, சீரம் நிறுவனம் சார்பில் கோவிஷீல்ட் மருந் தும் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

கோவிஷீல்ட் தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்பட்டு 28 நாட்களுக்குப் பின் 2ஆவது முறை மருந்து செலுத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு முன்பு அறிவுறுத்தி இருந்தது. ஆனால் அண்மையில் 28 நாட்களுக்குப் பின் என்ப தற்குப் பதிலாக 6 வாரங்கள் முதல் 8 வாரங்களுக்கு இடையே 2ஆவது முறை செலுத்திக் கொள்ளலாம் என்றும் அதற்கு மேல் நீட்டிக்கக் கூடாது என்றும் மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. இதற்கு மத்தியில் கடந்த சில நாட்களாகவே அய்ரோப்பா வைச் சேர்ந்த பல்வேறு நாடு களும் ஆக்ஸ்போர்ட் தடுப் பூசிக்கு தொடர்ந்து தடை விதித்து வருகிறது. தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்களுக்கு ரத்தம் உரையும் பிரச்சினை ஏற்படுவதால் மோசமான பக்க விளைவுகள் ஏற்படுவ தாகவும் இதனால் தடுப்பூசி களுக்குத் தடை விதிக்கப் படுவதாகவும் அந்நாடுகள் அறிவித்திருந்தன.

இந்த நிலையில் கோவி ஷீல்ட் தடுப்பூசியின் 2ஆவது முறை 75 முதல் 90 நாட் களுக்குள் செலுத்திக் கொண் டால் 90விழுக்காட்டளவில் பலன் தரும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார். 2ஆவது முறை செலுத்துவதற்கு ஒரு மாதம் இடைவெளி இருந்தால் 70 விழுக்காடு அளவில் பலன் கிடைக்கும் என்று கூறப்பட்ட நிலையில், 2.5 முதல் 3 மாத இடைவெளி இருப்பது கூடுதல் பலன் தரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

'தடுப்பூசி பரிசோதனை யின் போது சில நோயாளி களுக்கு ஒரு மாத கால இடைவெளியில் 2ஆவது முறை வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு 60-70 சதவீதம் பலன் கிடைத்தது. சில ஆயி ரம் நோயாளிகளுக்கு  2-3 மாத இடைவெளியில் 2ஆம் முறை வழங்கப்பட்டது. அங்குதான் அவர்கள் செயல்திறன் 90 சதவீதமாக இருப்பதைக் கண் டோம்" என்றார்.

Comments