ஆர்.எஸ்.எஸ்.ஸின் அரசியல் கட்சியான பா.ஜ.க. தமிழகத்தில் ஒரு போதும் நுழைய முடியாது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தமிழர் தலைவர் எழுச்சியுரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 21, 2021

ஆர்.எஸ்.எஸ்.ஸின் அரசியல் கட்சியான பா.ஜ.க. தமிழகத்தில் ஒரு போதும் நுழைய முடியாது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தமிழர் தலைவர் எழுச்சியுரை

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் அரியலூர் தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் கு.சின்னப்பா அவர்கள் தமிழர் தலைவர் அவர்களுக்கு பயனாடை அணிவித்தார்.  தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கு. சின்னப்பாவை ஆதரித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். (அரியலூர் - 20.3.2021)

திருவையாறு, மார்ச் 21 நாட்டில் மத வெறியை அமல்படுத்த முயற்சி செய்யும் ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் கட்சியான பா... எப்படியாவது தமிழ்நாட்டில் நுழைந்து விடலாம் என்று பார்க்கிறது. இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் நுழையலாம். தமிழகத்தில் ஒரு போதும் நுழைய முடியாது என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்

கி. வீரமணி அவர்கள்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று (20.3.2021) அரியலூர், செந்துறை, (குன்னம்) திருவையாறு தொகுதிகளில்  தேர்தல் பரப்புரை மேற் கொண்டார் திராவிடர் கழகத் தலைவர், அதன் விவரம் வருமாறு:

திருக்காட்டுப்பள்ளி (திருவையாறு )

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருவையாறு தொகுதி தி.மு..வேட்பாளர் துரை.சந்திரசேகரன்  அவர்களை ஆதரித்து திருக்காட்டுப்பள்ளியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு  மாவட்ட தலைவர் .அமர்சிங் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் அல்லூர் பாலு வரவேற்புரை யாற்றினார்.

மாவட்ட காப்பாளர் வெ.ஜெயராமன், மண்டல தலைவர் அய்யனார், மாவட்ட செயலாளர் அருணகிரி, மாவட்ட அமைப்பாளர் வீரமணி, ஒன்றிய தலைவர் கண்ணன், ஒன்றிய செயலாளர் ஸ்டாலின், மாவட்ட விவசாய அணி தலைவர் பாலசுப்பிரமணியன்,  கழக பேச்சாளர் கலைவாணி வீரமணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கழக  கிராமப்புற பிரச்சாரக்குழு அமைப் பாளர்  அதிரடி அன்பழகன், கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் உரையாற்றிய பின் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேசினார்.

அவர் தனது உரையில்..

தமிழகத்தில் பா...

ஒரு போதும் நுழைய முடியாது

தி.மு.தேர்தல் அறிக்கை ஒரு அற்புதமான ஆவணம்.நாட்டில் மதவெறியை அமல்படுத்த முயற்சி செய்வதை நாள்தோறும் பார்க்கிறோம். விவசாயிகள் வாழும் பகுதி இது. விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தை நாடே அறியும்.

ஆர்.எஸ்.எஸ்.ஸின் அரசியல் கட்சியான பா...எப்படியாவது தமிழ்நாட்டில் நுழைந்து விடலாம் என்று பார்க்கிறது.

இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் நுழையலாம். தமிழகத்தில் ஒரு போதும் நுழைய முடியாது.

2 கோடி பேருக்கு வேலை என்று சொன்னார்கள்.அனைவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் தருவதாக சொன்னார்கள்.அவ்வளவும் பொய் என்று இப்போது மக்களுக்கு தெரிந்துள்ளது.

அவர்கள் சொல்வதை இங்கிருக்கும் அடிமை .தி.மு.. ஆட்சி அப்படியே  கேட்கிறது. கஜா புயலால் காவிரி டெல்டா மக்கள் பாதிக்கப்பட்டதற்கு ஒரு ஆறுதல் சொல்லியிருப்பார்களா?  இங்கு வேட்பாளராக இருக்கும் செயல்வீரர் துரை.சந்திரசேகரன்  கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர். பிரபலமான நடிகர் சிவாஜி கணேசன் மூலமாக நாட்டுக்கே அறிமுகமானவர் ( கைதட்டல்) இந்த ஆட்சிக்கு முடிவுகட்ட துரை.சந்திரசேகரன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள் என்று கேட்டு விடை பெறுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

பரப்புரை கூட்டத்தில் தி.மு..தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம், பூதலூர் வடக்கு ஒன்றிய தி.மு..செயலாளர் கல்லணை செல்லக்கண்ணு, நகர் தி.மு..செயலாளர் ஜெயராமன், .தி.மு.. ஒன்றிய செயலாளர் நந்தகுமார், சி.பி.அய்.(எம்). ஒன்றிய செயலாளர்  பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திராவிடர் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், ஒருங்கிணைப்பாளர் பேரா..சுப்பிரமணியம், மாநில மாணவர் கழக செயலாளர் .பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டி, தி.என்னாரெசு பிராட்லா உள்ளிட்ட தோழர்கள் பயணத்தில் பங்கேற்றனர். முடிவில் பூதலூர் ஒன்றிய செயலாளர் புகழேந்தி நன்றி கூறினார்.

அரியலூர்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அரியலூர் தொகுதி .தி.மு.. வேட்பாளர் கு.சின்னப்பாவை ஆதரித்து  நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு மண்டல தலைவர் இரா.கோவிந்தராசன் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் சிந்தனைச் செல்வன், மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகம், மண்டல செயலாளர் மணிவண்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் சி.காமராஜ், தங்கவேலு, செல்லமுத்து, மாவட்ட துணைத் தலைவர் திலீபன், இராமச்சந்திரன், தங்க.சிவமூர்த்தி, செந்தில்குமார், வழக்குரைஞர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கழக  கிராமப்புற பிரச்சாரக்குழு அமைப்பாளர் அதிரடி அன்பழகன், கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் பேசியபின் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.  அவர் தனது உரையில்...

.தி.மு.. ஆட்சியில்

18 அனிதாக்களை இழந்துள்ளோம்

"தமிழக வாக்காளப் பெருமக்கள் கட்சி, ஜாதி, மதம் வேறுபாடின்றி மக்கள் முடிவு செய்து விட்டார்கள்.இந்த இயக்கம் அற்புதமான இயக்கம்‌. நீரடித்து நீர் விலகாது என்று சொல்வதை போன்ற ஒரு இயக்கம் திராவிட இயக்கம். எதிரிகள் இந்த கூட்டணியை சிதறடிக்க என்னென்னவோ முயற்சி செய்தார்கள். ஆனால் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக இருக்கிறார்கள்.

மோடி இருவரின் கையைப்  பிடித்து தூக்கி காட்டினார். அது எதற்கு என்றால் கைகள் எந்த நேரத்திலும் முறிக்கப்படலாம் என்பதை காட்டத்தான்.

அறிவார்ந்த மக்கள் அரியலூர் மக்கள் என்பதை நிரூபிக்க வேண்டும்.கடந்த முறை ஏமாந்தது போல இந்த முறை ஏமாந்து விடக்கூடாது. ஒரு அனிதாவை மட்டும் இழக்கவில்லை. நாடெங்கும் 18 அனிதாக்களை இழந்துள்ளோம். அதற்கு காரணமான நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஒருவரி கூட .தி.மு..தேர்தல் அறிக்கையில் இல்லையே.! எனவே இந்த தொகுதியில் போட்டியிடும் .தி.மு.. வேட்பாளர் வழக்குரைஞர் கு.சின்னப்பா அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள். சின்னப்பா எங்கள் பொன்னப்பா..(பலத்த கைதட்டல்)."

நன்றி. வணக்கம். இவ்வாறு பேசினார்.

பரப்புரை கூட்டத்தில்

தி.மு‌..கொள்கை பரப்பு துணை செயலாளர் பெருநற்கிள்ளி,மேனாள் சட்டமன்ற உறுப்பினர் பாளை.அமரமூர்த்தி, ஒன்றிய தி.மு..செயலாளர் அறிவழகன், நகர செயலாளர் முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் பாலு, சி.பி.அய். தண்டபாணி, சி.பி.அய்(எம்).மணிவேல், காங்கிரஸ் நகர் தலைவர் சந்திரசேகரன், வி.சி.. மாவட்ட செயலாளர் செல்வநம்பி, எம்.ஜி.ஆர்.கழகம் கலைவாணன், .தி.மு.. தங்கவேல், இராமநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.முடிவில் ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

பரப்புரை பயணக் கூட்டத்தில் திராவிடர் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், ஒருங்கிணைப்பாளர் பேரா..சுப்பிரமணியம், மாநில மாணவர் கழக செயலாளர் .பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டி, தி.என்னாரெசு பிராட்லா உள்ளிட்ட தோழர்கள்   பங்கேற்றனர்.

 செந்துறை (குன்னம்)

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் குன்னம் தொகுதி தி.மு..வேட்பாளர் எஸ்.எஸ்.சிவசங்கரை ஆதரித்து செந்துறையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு மாவட்ட தலைவர்

நீலமேகம் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் முத்தமிழ் செல்வன் வரவேற்புரையாற்றினார். மண்டல செயலாளர் மணிவண்ணன், மாவட்ட செயலாளர் சிந்தனைச் செல்வன், பொதுக்குழு உறுப்பினர் ஜெயங்கொண்டம் காமராஜ், மண்டல இளைஞரணி செயலாளர் பொன்.செந்தில்குமார், மாவட்ட அமைப்பாளர் இராமச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர் சேகர், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் இளவரசன், ஒன்றிய தலைவர் சங்கர், மாவட்ட இளைஞரணி தலைவர் அறிவன், மாவட்ட இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கழக  கிராமப்புற பிரச்சாரக்குழு அமைப்பாளர்  அதிரடி  அன்பழகன், கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் உரையாற்றிய பின் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பேசினார்.

அவர் தனது உரையில்...

அதிமுக அரசுமீது ஆளுநரிடம் அன்புமணி ராமதாஸ் ஊழல் புகார் கொடுத்தாரே!

"தமிழ்நாட்டில் இப்போது அலை அடித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு பெயர்தான் ஸ்டாலின் அலை. தமிழ் மக்கள் இந்த முறை ஏமாற தயாரில்லை. நாங்கள் வாக்கு கேட்டாலும் கேட்காவிட்டாலும் மக்கள் தயாராகி விட்டார்கள்.

முதலில் மக்கள் தயாராகி விட்டார்கள்.பிறகுதான் வேட்பாளர்கள் தயாரானார்கள்.இதுதான் இந்த தேர்தலின் சிறப்பு.

தமிழ்நாட்டை மீட்க வேண்டுமானால் தி.மு.. கூட்டணியை வெற்றி பெற வைக்க வேண்டும். இது பெண்ணுரிமைக்காக, சமூக நீதிக்கான, நமது உரிமைகளை மீட்க அமைந்த கூட்டணி. .தி.மு..கூட்டணியில்  உள்ள பா... கடந்த 2015இல் கவர்னர் ரோசய்யாவிடம் 18 துறைகளில் ஊழல் என்று புகார் மனு அளித்தனர்.

மீண்டும் 2017இல் அன்புமணி ராமதாஸ் ஆளுநர் பன்வாரிலாலிடம் 24 துறைகளில் ஊழல் என்று புகார் மனு கொடுத்தார். இதற்கு என்ன பதில் இருக்கிறது. இருவரும் ஒன்று சேர்ந்து நிற்கிறார்கள். இந்த மண்ணில்தான் நீட் தேர்வின் காரணமாக நமது பிள்ளை அனிதாவை இழந்தோம்.

உறவுக்கு கை கொடுப்போம்.உரிமைக்கு குரல் கொடுப்போம் என்று தி.மு.. கூறுகிறது. எனவே எஸ்.எஸ்.சிவசங்கருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்." இவ்வாறு அவர் பேசினார்

தி.மு..கொள்கை பரப்பு துணை செயலாளர் பெருநற்கிள்ளி, தி.மு..வடக்கு ஒன்றிய செயலாளர் ஞானமூர்த்தி, தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வராசு, சி.பி.அய்.(எம்), கந்தசாமி, சி.பி.அய்.(எம்), மாவட்டக்குழு உறுப்பினர் ரமேஷ், வி.சி..பொறுப்பாளர் கருப்புசாமி, செந்துறை ஊராட்சி மன்ற தலைவர் கடம்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பரப்புரை பயணக் கூட்டத்தில் திராவிடர் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், ஒருங்கிணைப்பாளர் பேரா..சுப்பிரமணியம், மாநில மாணவர் கழக  செயலாளர் .பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டி, தி.என்னாரெசு பிராட்லா உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

 

 

No comments:

Post a Comment