ஏட்டு திக்குகளிலிருந்து...

 டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

·     தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 24 சட்டமன்ற இடங்களை திமுக ஒதுக்கியுள்ளதாக தகவல்.

·     அசாம் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால், குடியுரிமை திருத்த மசோதா ரத்து செய்திடுவோம், பிரியங்கா வாக்குறுதி.

·     புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் தனித்து போட்டியிட முடிவு. பாஜகவுக்கு பின்னடைவு.

·     பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சிறுமியைத் திருமணம் செய்து கொள்வாயா என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேட்பது முட்டாள்தனம் என்கிறது தலையங்கச் செய்தி.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     இந்திரா காந்தி அறிவித்த அவசர நிலை பிரகடனம் தவறு. ஆனால் தற்போதுள்ள நிலைமைக்கு முற்றிலும் மாறானது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து.

·     இந்தியாவில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மோடி அரசின் தற்காலிக திட்டங்கள் உதவாது என மேனாள் பிரதமர் மன்மோகன் சிங் பேச்சு.

தி டெலிகிராப்:

·     அய்ந்து மாநில தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க சம்யுக்தா கிசான் மோர்ச்சா பிரச்சாரம் மேற்கொள்ளும் என அந்த அமைப்பு அறிவிப்பு.

·     இந்தியாவில் ஜனநாயகம் வீழ்ச்சி குறித்த உலகளாவிய அக்கறை பற்றிய ஒரு கேள்விக்கு, வீழ்ச்சி இல்லை. ஜன நாயகத்தின் கழுத்து நெரிக்கப்படுகிறது என ராகுல் காந்தி பதில். அனைத்து நிறுவனங்களிலும் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவி உள்ளது. அதற்கான நிதி கிடைப்பதற்கு பிரதமர் மோடி உதவுகிறார் என குற்றம் சாட்டியுள்ளார்.

·     .பி. ஹத்ராஸ் மாவட்டத்தில் மேலும் ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, காவல்துறையில் புகார் கொடுத்த பெண்ணின் தந்தை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

·     அரியானா மாநிலத்தில் உள்ளோர்க்கு மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் 75 சதவீதம் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் மசோதாவிற்கு ஆளுநர் சத்யடியோ நரேன் ஆர்யா ஒப்புதல் அளித்தார்.

- குடந்தை கருணா

3.3.2021

Comments