“மஞ்சள் அரைத்தாயா - நாத்து நட்டாயா எதுக்கு வரி-கிஸ்தி?"

           அடிப்படை விலை  : 30.50

               மத்திய அரசின் வரி               : 38.55

               மாநில அரசின் வரி : 16.50

               விநியோகிப்பாளர்   :  6.50

                                             ------------

               மொத்த விலை         = 92.05

                                                             ------------

தினமும் ஒருவர் தனது இரு சக்கர வாகனத்துக்கு 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டால் அரசுக்கு வரி மட்டுமே ரூ.59.80. மாதத்தில் 26 நாளைக்கு பெட்ரோல் போட்டால் மொத்தம் 2,600 ரூபாய். அரசுக்கு செலுத்தும் வரி ரூபாய் 1554.80 காசு.

எனக்கு சம்பளம் 7 ஆயிரம். ஆனால் என் உழைப்பில் பிடுங்கும் அரசு வரி ரூ.1554.80 காசு பெட்ரோலில் மட்டும். இன்னும் இருக்கு, ஓட்டலில் சாப்பிட்டது, சினிமா பார்த்தது, சோப்பு, சாம்பு, பேஸ்ட், பிரஸ், செருப்பு, துணி எடுத்ததுன்னு கணக்கு பண்ணினா தலையே சுத்திடுச்சு-எவ்வளவு வரி!

கார் வைத்து இருந்து தினமும் 500 ரூபாய்க்கு 26 நாளைக்கு பெட்ரோல் போட்டால் 26ஜ்500=ரூ.13000. இதற்கு என் உழைப்பில் இருந்து அரசுக்கு செலுத்தும் வரி ரூபாய் 7774

எனது உழைப்பு என் முதலீடு என் வேர்வையில் சம்பாதித்ததை அரசுக்கு அழுகிறேன். ஆனால் இந்த அரசுகள் இலவசங்களையும், "வெற்றி நடை போடுகிறது டிஜிட்டல் இந்தியா" என்று வெத்து விளம்பரம் செய்து கொண்டு வரி என்ற பெயரில் மக்களை கசக்கிப் பிழிந்து எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

நின்னா வரி, குனிந்தால் வரி, எல்லா இடங்களிலும் வரி, இவனுக ஒவ்வொரு திட்டத்தையும் கொண்டு வந்து என் வரிப் பணத்தில் ஊழல் செய்து கவுன்சிலர் முதல் எம்எல்ஏ, எம்.பி, அமைச்சர், அரசு அதிகாரிகள் வரை சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

ஒரு கூட்டத்துக்கு கோடிக்கணக்கில் ஊழல் பணத்தில் செலவு செய்கிறார்கள்.

மக்களே சிந்தியுங்கள்! நல்ல அரசை தேர்வு செய்யுங்கள்! மீண்டும் மீண்டும் வாய்ப்பு அளிக்காமல் வரி என்ற பெயரில் மக்களை சாகடிப்பவர்களை தூக்கி எறியுங்கள்.

-முகநூலிலிருந்து

குறிப்பு: நாள்தோறும் பெட்ரோல் விலையை ஏற்றி வந்த மோடி அரசு சில நாட்களாக நிறுத்தி வைத்திருப்பது ஏன்?

தேர்தல் - தேர்தல் - தேர்தல்!

ஏமாற்றுக்காரர்களுக்குப்

பாடம் கற்பிப்பீர்!

Comments