பிரேசிலில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி விலகல்

ரியோ டி ஜெனிரோ, மார்ச் 31- பிரேசிலில் கரோனா பாதிப்பு அதிக அளவில் காணப்படுகி றது. உலக அளவில் கரோனா அதிகம் பாதித்த நாடுகள் பட்டியலில் அந்நாடு இரண் டாம் இடத்தில் உள்ளது. கரோனா பரவலைக் கட்டுப் படுத்த தடுப்பூசியும் பிரேசி லில் போடப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, பிரேசி லுக்கு தடுப்பூசிகளைப் பெறு வதில் வெளியுறவுத்துறை அமைச்சர் எர்னஸ்டோ அராஜோ ராஜாங்க முறை யில் தோல்வி அடைந்து விட் டதாக விமர்சனங்கள் எழுந்தன.

வெளியுறவுத்துறை அமைச்சர் எர்னஸ்டோ அரோஜோ, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புடன் நெருக்கமான நட்புறவு மற்றும் சீனாவுக்கு எதிராக கடுமையான விமர் சனங்களை முன்வைத்தது ஆகிய காரணங்களால்  பிரே சில் போதிய அளவு தடுப் பூசிகளைப் பெறுவதில் சிர மங்களை எதிர்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தன் மீதான விமர்சனங்களுக்கு பொறுப் பேற்று பிரேசில் வெளியுற வுத்துறைஅமைச்சர் எர்னஸ்டோஅரோஜா பதவி விலகியுள்ளதாக தக வல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், இது குறித்து அதி காரப்பூர்வ அறிவிப்பு வெளி வரவில்லை

Comments