அறிஞர் அண்ணா ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் சிறப்புக் கூட்டம் ''முறியடிக்க முடியாத முப்பெரும் சாதனைகள்'' புத்தக வெளியீட்டு விழா

 

சென்னை,மார்ச்4- தந்தை பெரியாரின் கொள்கைகளுக்கு சட்ட வடிவம் அளித்த அண்ணா அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற நாளை (6.3.1967) கொண்டாடும் வகையில் சிறப்புக் கூட்டத்தில்   ''முறியடிக்க முடியாத முப் பெரும் சாதனைகள்புத்தக வெளியீட்டு விழா சென்னை பெரியார் திடலில் நாளை (5.3.2021) மாலை 6.30 மணி யளவில் நடைபெறுகின்றது. திராவிட மகளிர் பாசறை மாநில அமைப்பாளர் சே.மெ.மதிவதனி வரவேற்புரை ஆற்றுகிறார்.

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையேற்று உரை யாற்றுகிறார்.

திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார். திரா விடர் கழக செயலவைத்தலைவர் சு.அறிவுக் கரசு, திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் .அருள் மொழி ஆகியோர் கருத்துரையாற்று கின்றனர்.

சுயமரியாதை திருமண சட்ட மசோதா, இருமொழிக் கொள்கை சட்ட மசோதா, தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா ஆகியவை குறித்து அறிஞர் அண்ணா அவர்கள் சட்ட மன்றத்திலும், வெளியிலும் ஆற்றிய எட்டு உரைகள் தொகுக்கப்பட்டு திராவிடர் கழக (இயக்க) வெளியீடாக வெளியிடப்படுகிறது. அண்ணாவின் முதல் மாநாட்டு தலைமை உரை, நீண்ட நாள் பிரிவுக்குப் பின் அய்யாவும் அண்ணாவும் பங்கேற்ற ஜீவா இல்ல திருமணத்தில் அண்ணா ஆற்றிய உரை, சுயமரியாதை திரும ணத்திற்கு சட்ட வடிவம் தந்த அண்ணாவின் சட்ட மன்ற உரை, நாகர சம்பட்டி பள்ளி விழாவில் தந்தை பெரியாரின் கொள்கை வெற்றியை பறைசாற்றும் அண்ணா உரை, மாகாண சுயாட்சி பற்றிய அண்ணா உரை, இருமொழிக் கொள் கையை நடைமுறைபடுத்திய போது, சட்டமன்றத்தில் அண்ணா ஆற்றிய உரை, தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானம் சட்டமன்ற உரை, தமிழ் நாடு பெயர் மாற்ற வெற்றி விழா கூட்டத்தில் ஆற்றிய உணர்வுரை ஆகியவற்றின் தொகுப்பாக இப் புத்தகம் வெளியிடப்படுகிறது. திராவிட மகளிர் பாசறை மாநில செய லாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை நன்றியுரையாற்றுகிறார்.

பாடல்கள் வெளியீடு

புத்தக வெளியீட்டுவிழாவில், நிதிதா திரைக்களம் வழங்கும்தொடக்கம்- திராவிடர்ப் படைபாடல்கள் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் மாரி கருணாநிதி இயக்கியுள்ள தொடக்கம் திரைப் படத்தின் பாடல்களை கொண்ட குறுந்தகடை தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிடுகிறார். இந்த திரைப்படம் நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு சமூக பிரச்சினைகள் பற்றி பேசும் படம் ஆகும்.

Comments