தேர்தல் களத்தில்..... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 23, 2021

தேர்தல் களத்தில்.....

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் 2021

தமிழகத்தின் உரிமையைடில்லியில் அடமானம் வைத்தவர் எடப்பாடி பழனிச்சாமிராயபுரத்தில்  தளபதி  மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

தமிழகத்தின் உரிமையை டில்லியில் அடமானம் வைத்தவர் எடப்பாடி பழனிசாமி என்று மு..ஸ்டாலின் தாக்கி பேசினார்.

தி.மு.. வேட்பாளர்கள் அய்ட்ரீம் மூர்த்தி (ராயபுரம்), பி.கே.சேகர்பாபு (துறைமுகம்), கே.பி.சங்கர் (திருவொற்றியூர்), சுதர்சனம் (மாதவரம்), ஆர்.டி.சேகர் (பெரம்பூர்), ஜே.ஜே.எபிநேசர் (ஆர்.கே.நகர்), எழும்பூர் (பரந்தாமன்), தாயகம் கவி (திரு.வி..நகர்) ஆகிய 8 பேரை ஆதரித்து சென்னை ராயபுரத்தில் தி.மு.. தலைவர் மு..ஸ்டாலின் நேற்று (22.3.2021) பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் உதயசூரியன்சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு பேசியதாவது:-

ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமாரை ஓட, ஓட விரட்ட வேண்டும் என்பதற்காக உங்களிடத்தில் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு வந்திருக்கிறேன். அவர் படுதோல்வி அடையவேண்டும். அவருக்கு டெபாசிட்’ பறிபோகவேண்டும். அவர் மைக்‘கை பார்த்தால் மட்டுமே பேசுவார். மக்களை பார்த்தால் பேசமாட்டார். அவர் ராயபுரம் தொகுதியில் 5 முறை வென்றும், தொகுதிக்கு ஒன்றுமே செய்யவில்லை. அவருக்கு  சரியான பாடம் வழங்க மக்கள் தயாராக இருக்கவேண்டும்.

அடிமை ஆட்சி

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக வண்ணையில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தியபோது தி.மு.. சார்பில் ஆதரவு கொடுத்தோம். நாம் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றுவதோடு மட்டும் அல்ல, கேரளா, மேற்கு வங்காளத்தில் உள்ளே நுழைய விடாத மாதிரி, தி.மு.. ஆட்சியில் இந்த சட்டத்தை உள்ளே அனுமதிக்கப்பட்டோம்.

பிரதமர் நரேந்திர மோடி என்ன சொல்கிறாரோ, அதை செய்யும் அடிமை ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. முதல்-அமைச்சர், அமைச்சர்கள் பற்றிய ஊழல்களை பட்டியலிட்டு ஆளுநரிடம் கொடுத்தோம். அவர் நடவடிக்கை எடுக்கமாட்டார் என்று தெரியும். ஆனால் மரபுக்காக கொடுத்தோம். தி.மு.. ஆட்சிக்கு வந்த அடுத்த நாளே நடவடிக்கை எடுக்கப்படும்.

என்னுடைய உழைப்பை...

எடப்பாடி பழனிசாமி பேசுவது வேடிக்கையாகவும், சிரிப்பாகவும் இருக்கிறது. அவர் வாய்க்கு வந்ததை எல்லாம் உளறுகிறார். உழைத்து, உழைத்து முன்னேற்றத்துக்கு வந்தவராம். அவர் ஊர்ந்து போய் பதவி வாங்கியதை இல்லை என்று நிரூபிக்க தயாரா? அவர் ஊர்ந்து போய் பதவி வாங்கியதை நிரூபிக்க நான் தயாராக இருக்கிறேன். மு..ஸ்டாலின் உழைக்காமலேயே முன்னுக்கு வந்தவர் என்று சொல்கிறார். என்னுடைய உழைப்பை பற்றி எடப்பாடி பழனிசாமி பேசுவதா?

ஓய்வுக்கு ஓய்வு கொடுத்து உழைத்த கலைஞர், மு..ஸ்டாலினிடம் எனக்கு பிடித்தது, உழைப்பு..., உழைப்பு.., உழைப்பு... என்று கூறியிருக்கிறார். அவர் கொடுத்த இந்த உழைப்பு பதவி குடியரசுத் தலைவர் பதவியை விட பெரிய பதவி. எடப்பாடி பழனிசாமி என்று சொன்னாலே, கரெப்ஷன், கலெக்ஷன், கமிஷன், கொடநாடு கொலை, கொள்ளை, சாத்தான்குளம் சம்பவம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம், நீட் தேர்வால் அனிதா உள்பட மாணவர்கள் மரணம், பொள்ளாச்சி சம்பவம், ஜெயலலிதா, சசிகலாவுக்கு செய்த துரோகம் தான். இது பொல்லாத ஆட்சி என்பதற்கு பொள்ளாச்சியே சாட்சி.

கரும்புள்ளி

.தி.மு..வை பா...வின் கிளைக் கழகமாக மாற்றிவிட்டார்கள். தமிழகத்தின் உரிமைகளை எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அடமானம் வைத்துவிட்டார். எனவே தமிழக வரலாற்றில் அவர் ஒரு கரும்புள்ளி. இந்த கொள்ளை கூட்டத்தை வீட்டுக்கு அனுப்பவேண்டும், சிறைக்கு அனுப்பவேண்டும். அதற்கான தேதி தான் ஏப்ரல் 6. தமிழ் மண்ணில் இந்தியை திணித்து, நீட்டை கொண்டு வந்து நுழைத்து மதவெறியை தூண்ட நினைப்பவர்களுக்கு நான் உறுதியோடு சொல்ல விரும்புவது. அது நடக்கவே நடக்காது. இது திராவிட மண். பெரியார், அண்ணா, கலைஞர் வாழ்ந்த மண். இங்கே மோடி மஸ்தான் வேலை எல்லாம் பலிக்காது.

இங்கே நிற்பவர்கள் மட்டும் வேட்பாளர்கள் இல்லை. நானும்தான் வேட்பாளர். முதல்-அமைச்சர் வேட்பாளர். மக்கள் தி.மு.. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால்தான் நான் முதல்-அமைச்சராக வர முடியும். எனவே உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

தேர்தல் அறிக்கை வெளியீடு:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை சென்னையில் நேற்று (22.3.2021) வெளியிடப்பட்டது. சென்னை தியாகராயநகரில் உள்ள பாலன் இல்லத்தில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு வெளியிட கட்சியின் மாநில துணைச் செயலாளர் சுப்பராயன் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் நா.பெரியசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

தமிழ்நாட்டில், தாய்மொழி தமிழைகற்பிக்கும் மொழியாகவும், உயர் நீதிமன்றத்தில் வழக்காடும் மொழியாகவும், கோவில்களில் வழிபாட்டு மொழியாகவும் உறுதிப்படுத்த தளர்வில்லாத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா மற்றும் பன்னாட்டு பள்ளிகளிலும் தமிழை பயிற்றுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து தொழில்களிலும், தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.21 ஆயிரம்குறைந்தபட்ச ஊதியமாக நிர்ணயிக்கப்படும். விவசாயிகளின் பொதுத்துறை வங்கிக் கடன், கூட்டுறவு வங்கி உள்ளிட்ட அனைத்துக் கடன்களும் ரத்து செய்யப்படும். வட்டியில்லாத விவசாயக் கடன்கள் வழங்கப்படும். தமிழகத்தில் விவசாயத்துக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரம் வேலையில்லா கால நிவாரணம் வழங்கப்படும். அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர்வழங்கப்படும். தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கை 2020 செயற்படுத்தப்படாமல் முற்றிலும் நிராகரிக்கப்படும். மருத்துவம் உள்ளிட்ட எந்த உயர் கல்விக்கும் தேசிய தகுதி நுழைவுத் தேர்வு அவசியமானதல்ல எனும் முறைமையை தமிழ்நாட்டில் உருவாக்க பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள்பதிவேடு போன்றவை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படாது. கணவரை இழந்தவர்கள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், திருமணமாகாமல் தனித்து வாழும் பெண்களுக்கு ஆண் பிள்ளைகள் இருந்தாலும் மாதம் ரூ.3 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். அரசு வங்கிகளில் சுயஉதவிக் குழு பெண்களுக்கு 4 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும்.

வசிப்பிடம் இல்லாத குடும்பங்களுக்கு தலா 8 சென்ட் மனை நிலம் கிடைக்கவும், அடிப்படை வசதிகள் கொண்ட வீடுகள் கட்ட ரூ.6 லட்சம் நிதியும் கிடைக்க நடைமுறைகள் எளிமையாக்கப்படும். அரசு நிலங்களில் வசிக்கும் வீடற்ற மக்களுக்கு உரிய வகையில் பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நீட் தேர்வு ரத்து

படிப்படியாக மதுவிலக்கு அமல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

தேர்தல் அறிக்கை வெளியீடு

 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

நீட் தேர்வு முற்றிலுமாக ரத்து, படிப்படியாக மது கடைகள் மூடப்பட்டு மது விலக்கை அமலாக்க வலியுறுத்துவோம் என்று தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அறிக்கையை கட்சி தலைமை அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே. ரங்கராஜன், தேர்தல் அறிக்கை குழுவின் தலைவர் பெ.சண்முகம் மற்றும் உறுப்பினர்கள் கண்ணன், தீபா, மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆறுமுக நயினார், தென்சென்னை மாவட்டச் செயலாளர் பாக்கியம், மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

சர்க்காரியா கமிஷன் வழிகாட்டுதல் அடிப்படையில் முதல்வர் முன்மொழிந்த மூன்று நபர்களின் ஒருவரை ஆளுநராக மத்திய அரசு நியமிக்க வலியுறுத்துவோம். பெண்களுக்கு சட்டமன்றம் நாடாளுமன்றத்தில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்துவோம். 60 வயதை கடந்த விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் மற்றும் அனைத்து முதியோருக்கும் முதியோர் ஓய்வூதியம் 3000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.

கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்றிட தொடர்ந்து குரெலழுப்புவோம். நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய தொடர்ந்து வலியுறுத்துவோம். 30 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்திட வலியுறுத்துவோம்.

தமிழ்நாட்டில் படிப்படியாக மதுக்கடைகள் மூடப்பட்டு மது விலக்கை அமலாக்க வலியுறுத்துவோம் உள்ளிட்ட 50 வகையான திட்டங்களை தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment