"எனக்கு வீடே தரவில்லை ஆனால் விளம்பரத்தில் மட்டும் எனது படத்தைப் போட்டுள்ளார்கள்!" பா.ஜ.க. விளம்பரத்தில் வந்த பெண் குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 24, 2021

"எனக்கு வீடே தரவில்லை ஆனால் விளம்பரத்தில் மட்டும் எனது படத்தைப் போட்டுள்ளார்கள்!" பா.ஜ.க. விளம்பரத்தில் வந்த பெண் குற்றச்சாட்டு

கொல்கத்தா, மார்ச்  24-- மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங் களாக தேர்தல் நடக்க இருக் கிறது, முதல் கட்ட வாக்குப் பதிவு மார்ச் 27ஆம் தேதி நடைபெறுகிறது, இன்னும் 4 நாட்களே எஞ்சி உள்ள நிலை யில், இந்த தொகுதிகளில் 25 ம் தேதி மாலையுடன் முதல் கட்ட பிரச்சாரம் ஓய்கிறது.

மாநில ஆட்சியை பிடிப் பதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வரும் பாஜக பல்வேறு விதமான பிரச்சாரங் களில் ஈடுபட்டு வருகிறது, இதில் கடந்த பிப்ரவரி 14 மற்றும் 25 ம் தேதிகளில் அங் குள்ள செய்தித் தாள்களில் வெளியான முழு பக்க வண்ண விளம்பரம் ஒன்று தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் மேற்கு வங்கத்தில் 24,00,000 லட்சம் பேருக்கு வீடு வழங்கப்பட்டு அவர்கள் பயனடைந்ததாக ஒரு விளம்பரம் கொடுத்தி ருந்தார்கள்.

அந்த விளம்பரத்தில், பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா மூலம் தான் எனக்கு வசிப்பதற்கு ஒரு இடம் இருக்கிறது என்று அந்த விளம்பரத்தில் வரும் பெண்மணி கூறுவது போல் வாசகம் இடம்பெற்றிருந்தது.

இதுகுறித்து இந்தியா டுடே நாளிதழ் அந்த பெண்ணை தொடர்பு கொள்ள முயற்சி செய்தது, அதில் கொல்கத்தா-வின் பௌபஜார் பகுதியில் உள்ள மலங்கா சந்தில் வசித்து வரும் லட்சுமி தேவி தான் அவர் என்பதை உறுதி செய்தது.

செய்தித்தாளில் வந்த விளம்பரம் குறித்து அவரிடம் கேட்டபோது, இந்த விளம் பரத்தில் இருப்பது தன் புகைப் படம் தான் என்றும், ஆனால் தன் புகைப்படம் இதில் எப்படி வந்தது என்பது குறித்தோ இந்த விளம்பரம் குறித்தோ தனக்கு தெரியாது என்று கூறினார். வீடு வழங்கப் பட்டதாக வந்த விளம்பரத் தில் வந்த லட்சுமி தேவி, ஒற்றை அறையில் ஒண்டு குடித்தனத்தில் வாடகைக்கு வசித்து வருகிறார்.

ஆறு பேர் கொண்ட குடும்பத்தில், குழந்தைகள் அறையினுள் படுத்துக் கொள்ள, பெரியவர்கள் வெளியில் உள்ள நடைபாதையில் படுத்துக் கொள்வதாக கூறும் லட்சுமி தேவி, இந்த இடத்திற்கு மாதம் ரூபாய் 500 வாடகை கொடுப்பதாக கூறினார்.

எழுதப்படிக்க தெரியாத தனக்கு, இந்த விளம்பரம் குறித்து அக்கம்பக்கத்தினர் சொல்லிதான் தெரியும் என்று சொல்லும் இவர், இந்த புகைப்படம் எங்கு எப்போது யார் எடுத்தது என்பது தெரிய வில்லை என்று தெரிவித்தார்.

மேலும், பாபுகாட் பகுதி யில் நடந்த ஒரு முகாமில், கழிவறையை சுத்தம் செய்த போது எடுத்த புகைப்படம் போல் உள்ளதாக ஊகம் தெரிவித்த அவர் தான் வசிக்கும் வீட்டில் கழிப்பறை வசதி கூட இல்லை என்று வருத்தப்பட்டார்.இந்த விவ காரம் தொடர்பாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன் சிங்-கை தொடர்பு கொண்ட போது அவர் பதில் ஏதும் கூற மறுத்துவிட்டதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டிருக்கிறது.


No comments:

Post a Comment