மாசு வெளிப்படுத்தாத எரிபொருள்

சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்தாத எரிபொருள் எது? ஹைட்ரஜன். இது மாசு எதையும் வெளிப்படுத்தாமல் முற்றிலுமாக எரிந்துவிடும். கடைசியில் நீர்த்திவலைகள் மட்டுமே எஞ்சும். இதனால் ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்தும் ஆய்வுகள் அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக, ஹைட்ரஜனை நீரிலிருந்து பிரிப்பது, அதற்கு தேவையான மின் சாரத்தை சூரிய ஒளியிலிருந்து பெறுவது போன்ற முறைகளால் பெறப்படும் ஹைட்ர ஜனை, 'பசுமை ஹைட்ரஜன்' என்றே விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள்.உலக ஹைட் ரஜன் கவுன்சிலின் கணக்குப்படி, மாற்று எரிசக்தி முறைகளை பயன்படுத்துவது மற்றும் இதர புதிய நுட்பங்கள் பயன் படுத்துவது அதிகரித்துள்ளது. இதனால் ஹைட்ரஜனின் உற்பத்தி செலவு வேகமாக குறைந்து வருகிறது.

உலகெங்கும் தற்போது புதிதாக, 228 ஹைட்ரஜன் எரிபொருள் ஆலைகள் கட்டப்பட்டு வருகின்றன.

இவற்றில் பெரும் பாலானவற்றுக்கு கட்டுமான வேலைகள், கடந்த ஓராண் டுக்குள் துவங்கப்பட்டன.இவற்றின் முதலீட்டு மதிப்பு, 300 பில்லியன் டாலர்கள் என்கிறது, ஹைட்ரஜன் கவுன் சில். ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட பல நாடு களில், லாரி, ரயில் மற்றும் கார் போன்ற போக்குவரத்துகளுக்கு ஹைட்ரஜன் இயந்திரங்களை உருவாக்கி சோதனைகள் நடந்து வருகின்றன.

அடுத்த, 10 ஆண்டுகளில், ஹைட்ரஜன் யுகம் பிறக்கும் என, வல்லுனர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

Comments