மந்த்ரா@எந்த்ரா@கேந்த்ரா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 27, 2021

மந்த்ரா@எந்த்ரா@கேந்த்ரா

 - இசைவாணன்குடியரசு

சாகிற வரையில் விடான் வைத்தியன், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்

- தமிழ் முதுமொழி.

 சமஸ்கிருதத்தில் இருந்துதான் தமிழ் மொழி பிறந்தது. சமீபத்திய சமூக வலை தளங்களில் நூல்களின் நூல்விடும் ஆய்வுக ளின் ஒற்றை நூல்தான் இது. பிணம் பிள்ளை பெறுமா? என்ற கேள்விக்கு எப்படி பதில் இல்லையோ அதே பதில் இல்லா பதில்தான் செத்து நாறும் இந்த சமஸ்கிருதத்துக்கும்.

மழைக்காலத்தில் ஏரி-குளம்- குட்டை களில் கேட்கும் தவளைகளின் கூச்சல்களுக் கும் இந்த சமஸ்கிருத கத்தலுக்கும் எந்த வேறு பாடும் இருப்பதில்லை. தமிழினத்தின் எந்த விழா கொண்டாட்டத்திலும், கேளிக்கை யிலும் எட்டிப் பார்க்காத இந்த மொழி எந்த தைரியத்தில் முட்டு சந்தில் குட்டிப்போட வருகிறது என்றே தெரியவில்லை.

திணை சார்ந்து வாழ்ந்த தமிழ் மக்களின் நாகரீக கலாச்சார பண்பாடு ரீதியான வாழ் வியலில் வீசிய காற்றின் வேக அசைவு களின் ஒலியே (velocity of sound) செம் மொழியானது. உலகின் திக்குவாய் மொழி களுக்கெல்லாம் வார்த்தைகளை அள்ளிக் கொடுத்து நாக்கில் வசம்பைத் தேய்த்து சரளமாக பேச வைத்த மொழி நம் தமிழ் மொழி.

தமிழை செம்மொழியில் கேட்க வேண்டுமா இதோ :

தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது

தூதிதூ தொத்தித்த தூததே - தாதொத்த

துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது

தித்தித்த தோதித் திதி!’’

தகர வருக்கப்பாட்டு - வித்தாரச் செய் யுள் - தனிப் பாடல்கள் - காளமேகப்புலவர்.

தமிழை பாமரன் மொழியில் கேட்க வேண்டுமா இதோ:

வா வாத்யாரே வூட்டாண்டே- நீ

வராங்காட்டிணா வுடமாட்டேன்

ஜாம் பஜார் ஐக்கு - நா

சைதாப்பேட்டக் கொக்கு

எல்லா வகையிலும் ரவுண்டு கட்டி அடிக்கும் எம் தமிழ் மொழியை கட்டம் கட்டி சிண்டு முடிக்கும் வேலையை நூல்கள் தொடர்ந்து செய்வதை அறுத்துக் கொள்ள வேண்டும்.

வெளிநாட்டு மூளைக் கடத்தலுக்கு (மூளைச் சாவுக்கு) உதவும் இந்த கல்வி முறைக்கு இதுபோன்றகேந்த்ரா வித்யா லயா ஏஜெண்டுகள்தமிழ் நிலத்தில் முளைத்த அரளி செடிகளாகும். கல்வியில் தேர்ச்சி என்ற பெயரால் வெளி நாட்டுக்கு ஏற்று மதியாய் போகும் தேங்காய் குடுமி களுக்கென்றே இந்த கேந்த்ரா வித்யால யாக்கள் இருக்கின்றன. இதில் தமிழுக் கென்ன வேலை இருக்கிறது. 2 தர்ப்பைப்புல் - துளசித் தண்ணீர் தீர்த்தம் - பசு - கோமியம் - யாககுண்டு - சமஸ் கிருதம் - ஒற்றைத்திரி பூணூல் - இந்த வகையறாக்குள்ளேயே தங் களை முடித்துக் கொண்ட இந்த பிண்டங்கள் சொல்லிக் கொடுத்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பாடத்திட்டம்தான் என்ன?

நான்காம் வகுப்பைத் தாண்டாத பகுத் தறிவுத் தந்தை பெரியாரின் தமிழ் எழுத்து சீர்த்திருத்தத்தை, வைப்பாட்டி மகனாக இருந்து பெற்று துக்ளக்குகள் தங்களைத் தூக்கி நிறுத்திக் கொள்ளவில்லையா? பெரியார் என்ன கேந்த்ரா வித்யாலயாவிலா படித்தார்

தன்னுடைய 17 ஆவது வயதில் முதல் வகுப்புக்குள் நுழைந்து படிப்பு சரியாக வரவில்லை என்று பள்ளியில் இருந்து துரத்தப்பட்ட பையன்தான் 1000-க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை இந்த உலகுக்குக் கொடுத்தான். (தாமஸ் ஆல்வா எடிசன்) மதிப்பெண்ணை சுமந்து கொண்டு ஊதியத்துக்கு வானூர்தியில் ஊர்ந்து செல்பவனுக்குத்தான் உங்கள் வித்யாலயா. அதற்குத்தான் அது பணி செய்து கிடக்கிறது.

6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை இந்தி மொழி கட்டாயம் - ஆனால் தமிழ் கட்டாய மொழிப்பாடம் இல்லை - இந்தி - சமஸ்கிருத மொழிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம்

- இந்திய தேசியக் கல்விக் கொள்கை

(மத்திய கேந்த்ர வித்யாலயா)

உலகில் பள்ளிக் கல்விக்கான உரிமை களை வழங்கி இருக்கும் நாடுகளில் நார்வே-சுவீடன்-பின்லாந்து இருப்பதை இத் தருணத்தில் நாம் பார்க்கலாம். நம் தமிழ் மொழிக்கு மட்டுமல்ல; தன் நாட்டில் குடியேறிய அனைத்து மொழியினருக்கும் இந்த நாடுகள் அவரவர் தாய்மொழிக் கல் வியை வழங்குவதில் அக்கறைக் காட்டு வதற்கு அவர்களின் அரசியல் வரலாறும் ஓர் காரணமாகிறது.

எந்த நாட்டினராக இருந்தாலும் ஒரே ஒரு மாணவனாக இருந்தாலும் அவன் தாய்மொழி மேம்பட அந்த ஒருவனுக்கு ஓர் ஆசிரியரை அமர்த்தும் பண்பும் அங்கு இருக்கிறது. (பசுக் கோமியத்தை குடிப்பதை விடஅவர்களின்புத்தி வந்தாலும் வர லாம்; ஒரு நம்பிக்கைத்தானே? இப்படி யொரு லங்காடித்தனம் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கும் போது தீவிர வாசிப்பின் தேவை கருதி இந்திய கல்விக் கொள்கை யின் அடிப்படையில் 17 ஆவது வரிசையில் படிக்க வேண்டிய ஒரு புத்தகத்தை வைக்க வேண்டியிருக்கிறது. அப்படியானால் வரலாற்று ஆசிரியர் ராபர்ட் பி.டவுன்ஸ் அவர்கள் வரிசைப்படுத்திய அந்த 16 புத்தகங்கள் என்ன? இதோ:

1. மன்னன் 2. பகுத்தறிவு 3. தேசங்களின் செல்வம் 4. ஜனங்களின் தொகைக் கோட் பாடு 5. சட்டமறுப்பு 6. டாம்மாமனின் குடில் 7. டாஸ் காபிடல் 8. வரலாற்றின்மீது கட லாதிக்கத்தின் செல்வாக்கு 9. வரலாற்றின் பூகோள கேந்திரம் 10. என் போராட்டம்: மைன் காம்ப் 11. டிரெவல்யூஷனிபஸ் ஆர் பியம் கொலஸ்டியம் 12. டிமொடு கார்டிஸ் 13. பிரின்ஸிபியா மாதெமாடிகா 14. உயிரி னங்களின் தோற்றுவாய் 15. கனவுகளின் விளக்கம் 16. தொடர்புநிலை (Relativity) விசேஷ, பொதுசித்தாந்தங்கள்

உலகை மாற்றிய இந்த புத்தகத்தின் வரிசையில் 17ஆவது இடத்தில் வைக்க வேண்டிய புத்தகமாக கீழ்காணும் புத்த கத்தை வைக்கலாம் என்ற உணர்வை தமி ழறிஞர் என்ற பெயர் அறியா நம் தமிழாசான் ஒரு சொற்பொழிவில் சொன்னதற்கிணங்க;

17. கம்பராமாயணம் - சேக்கிழார்

கல்வியின் தரத்துக்கு இதுவே உள் ளங்கை நெல்லிக்கனி. மழைக்குக்கூட பள் ளியின் ஓதம் ஏறிய சுவர்ப்பக்கம் நிற்காத நம் பொது அறிவு பொக்கிஷக்கிடங்கு நமை ஆளும் சாமி; பழனிசாமியின் கொந் தளிக்கும் தமிழறிவே இப்படியிருக்கும் போது, தமிழுக் காகவும் அதன் தூய்மையை காக்க இன்னும் நம் வைகோ போன்றவர் களால்தான் குரல் அற்றவர்களின் குரலாக குரல் கொடுக்க வேண்டியிருக்கிறது.

வடக்கே இருப்பவன் எதிரியாக தெளி வாக தெரிகிறான்; ஆனால் தெற்குக்குள் இருப் பவன் தமிழ்தேசியம் பேசிக்கொண்டு பனிப்படலத்துக்குள் மறைந்த வஞ்சகனாக இருக்கிறான். எல்லா காலக்கட்டத்திலும்

- நிகோலோ மாக்கியவெல்லி - தாமஸ்பெயின் - ஆடம்ஸ்மித் - தாமஸ் மால்துஸ் - என்றி டேவிட் - ஹாரிபெட் பீச்சர்ஸ்டோவ் - காரல்மார்க்ஸ் - ஆல் பிரட்டி. மாஹன் - சர்.ஹால்பர்ட்ஜே .மாக் கிண்டர் - அடால்ப் ஹிட்லர் - நிகொலஸ் கோபர்நிகஸ் - வில்லியம் ஹார்வி - சர்.அய்சக் நியூட்டன் - சார்லஸ் டார்வின் - சிக்மண்ட் பிராய்ட் - ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன்

கன்னத்தில் முத்தமிட்டு காட்டிக் கொடுப்பவன் இருக்கத்தான் செய்கிறான். எட்டுத் திக்கும் மூட் அவுட் என்றால் எப்பக்கம் இருக்கும் ரிலாக்ஸ்?

இனி தொடரும் திராவிடப்போர் நெஞ் சுக்கு நேரே இருப்பவனிடத்தில் மட்டு மல்ல, முதுகுக்குப் பின்னால் இருந்து குத்துப் வனிடத்திலும் சேர்த்துப் போரிட வேண்டி இருக்கிறது.

அதற்கு வரும் தேர்தல் வெற்றி என்ற தமிழ் நிலத்தில் வாள்களையும் - கேடயங் களையும் - ஈட்டிகளையும் கொண்டு வந்து கொட்டும் என்று உறுதியாக நம்ப லாம். அதற்காக, விம்மியெழும் கவச மார்பு களின் மூச்சுச் சத்தம் இடி முழக்கமாய்க் கேட்டுக்கொண்டிருக்கிறது!

- நன்றி: சங்கொலி. 26.2.2021

No comments:

Post a Comment