ஒற்றைப் பத்தி: விளையாட்டல்ல... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 4, 2021

ஒற்றைப் பத்தி: விளையாட்டல்ல...

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் விளை யாடிக் கொண்டு இருக்கிறது. இந்திய அணியில் உள்ள ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், சுப்மான் கில், பிரித்விஷா, சைனி ஆகியோர் ஆஸ்தி ரேலியாவில் உணவு விடுதி ஒன்றுக்குச் சென்று உணவு உண்டது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

உணவு விடுதியில் மாட்டுக்கறி சாப்பிட்டதுகூட பிரச்சினையாகி உள்ளது.

விராட்கோலி முழுவதும் சைவத்திற்கு மாறியுள்ளதால், ஆட்டத்தின் வீரியம் குறைந் திருக்கிறது - மாட்டுக் கறி சாப்பிடும் வீரர்கள் ஆட்டத் தில் அசத்துகிறார்கள் என் கிற கருத்துகளும் இணையத் தில் ஓடிக் கொண்டுள்ளன.

கிரிக்கெட்டில் சாப்பாட் டில் கூடப் பிரச்சினை. பல ஆண்டுகளுக்குமுன் கும்ப்ளே மாட்டுக்கறி சாப் பிட்டது குறித்து சங்கிகள் பிரச்சினையைக் கிளப்பி னார்கள். அவர் தக்க பதிலடி கொடுத்தார்.

இப்பொழுது மீண்டும் பிரச்சினையைக் கிளப்பியுள் ளனர்.

கிரிக்கெட்டிலும் பார்ப் பனியம் என்பது இயல்பு தானே!

உணவு விடுதிக்குச் சென்ற அய்ந்து இந்திய கிரிக் கெட் வீரர்களை அங்குள்ள இரசிகர் ஒருவர் கட்டிப் பிடித்து, தன் ஆர்வத்தை வெளிப்படுத்தினார்;  அய்வர் சாப்பாட்டுக்கான பணத்தை யும் செலுத்தியுள்ளார். இவர் கள் முகக்கவசம் அணிய வில்லை - எனவே, விதியை மீறிவிட்டனர் என்று ஆஸ்தி ரேலிய கிரிக்கெட் வாரியம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதன் விளைவாக இந் திய கிரிக்கெட்டர் அய்வரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனராம். இந்நாட்டில் உள்ள விதிமுறைகளைப் பின்பற்றாவிட்டால் வெளி யேறி விடலாம் என்றும் வெளிப்படையாகக் கூறி விட்டனராம்.

இந்தியக் கிரிக்கெட் வாரி யமோ நெளிகிறது. இதில் இரண்டு பிரச்சினைகளைக் கவனிக்கவேண்டும்.

ஒன்று மாட்டுக்கறி சாப் பிட்டதைப் பிரச்சினையாக் கியதன் பின்னணியில் பார்ப் பனியம் இருக்கிறது.

இன்னொன்று, இன் னொரு நாட்டுக்குச் சென்று விளையாடும் இந்திய வீரர்கள், அந்நாட்டின் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டாமா என்பதாகும்.

கிரிக்கெட் ஆட்டக்காரர் கள் என்றால், ஏதோஅந் தரத்தில் பறப்பது போன்ற' அகங்கார உணர்வு - இதுபோன்ற சிக்கலில்தான் மாட்டிக் கொள்ளச் செய்யும்.

ஆட்டத்தில் காட்டுங்கள் வேகத்தை - அதிகப்பிரசிங் கத்தனம் வேண்டாம்!

 - மயிலாடன்

No comments:

Post a Comment