சமூகப் புறக்கணிப்புகளால் டில்லியை விட்டு வெளியேறும் இஸ்லாமியர்கள்

புதுடில்லி, நவ.1 குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த  போராட்டத்தை ஒட்டி, வடகிழக்கு டில்லியில், இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்துத்துவ குழுக்களால் நிகழ்த்தப்பட்ட வன்முறை மற்றும் அதைத்தொடர்ந்த துன்புறுத்தல் மற்றும் அவமதிப்புகளால், தங்களின் வீடுகளை குறைந்த விலைக்கு விற்றுவிட்டு இஸ்லாமியர்கள் வெளியேறுகின்றனர்


தங்களுக்கு அருகாமையில் இவ்வளவு காலமும் வாழ்ந்த சக அண்டை வீட்டார்களின் புறக்கணிப்புகள் மற்றும் அவமதிப்புகளே இதற்கு காரணமாய் உள்ளன.


கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர், 14 வயதான ஃபிஸாவின் குடும்பத்தினர், சிவ் விகாரிலிருந்த தங்களின் வீட்டை, சந்தை மதிப்பைவிட மிகக்குறைந்த விலைக்கு விற்றுவிட்டு, பாதுகாப்பான இடத்திற்குச் சென்றனர்.


இதுவே, மற்ற நேரமாக இருந்தால், கடந்த 2010 ஆம் ஆண்டு வாங்கிய அவர்களின் வீட்டை, ரூ.20 லட்சத்திற்கு அவர்களால் விற்றிருக்க முடியும். ஆனால் அந்த இடத்தை விட்டு வெளியேறவேண்டும் என்ற ஒரே நெருக்கடியின் காரணமாக அவர்கள் மிகக்குறைந்த விலைக்கு விற்றுள்ளனர்.


தங்கள் பகுதியில் வசிக்கும் இந்துக்கள் பலரும், தங்களுக்கு பல வகைகளில் இன்னல் தருவ தாக கூறுகின்றனர் பல இஸ்லாமியர்கள்,  ”நாங்கள் எதிரிலோ அல்லது அருகிலோ வருவதைப் பார்த்தாலே, ‘கரோனா வைரஸ்’ என்று எங்களைக் குறிப்பிட்டு, தங்களின் வாய் மற்றும் மூக்கை மூடிக்கொள்கின்றனர்'' என்று வருத்தமுடன் பெயர் வெளியிட விரும்பாத பல இஸ்லாமியர்கள் கூறியுள் ளனர்.


எனவே, தங்கள் மீதான இந்த சமூகப் புறக்கணிப்புகளை தவிர்க்க, வடகிழக்கு டில்லியிலிருந்து, தங்களின் சொத்துக்களை வந்த விலைக்கு விற்றுவிட்டு வேறு இடங்களுக்கு குடி பெயர்கின்றனர். இதேபோல் 2016 ஆம் ஆண்டில் அரி யானாவின் பல்வேறு ஊர்களில் இஸ்லாமியர்கள் புறக்கணிக்கப்பட்டதன் கார ணமாக ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் டில்லி உள்ளிட்ட பல நகரங்களுக்கு இடம் பெயரும் சூழல் ஏற் பட்டது. தற்போது அதே நிலைத் தொடர்கிறது.


Comments