அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு தமிழக அரசு அரசாணை வெளியீடு : தலைவர்கள் கருத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 30, 2020

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு தமிழக அரசு அரசாணை வெளியீடு : தலைவர்கள் கருத்து

மு.க.ஸ்டாலின் திமுக தலைவர்


''தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் உரிய பயனடைய வேண்டும் என்னும் நோக்கில், திமுக பல தளங்களிலும் முன் னெடுத்த தொடர் போராட்டங்கள் மற்றும் அழுத்தம் காரணமாக, எடப்பாடி அதிமுக அரசு தற்போதாவது இறங்கிவந்து “நீட்” தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத முன்னுரிமை இட ஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப் பித்திருப்பது வரவேற்கத்தக்கது.


தமிழக அரசிடம் இந்த அதிகாரம் இருக்கிறது என்றால் - ஏன் மசோதா நிறைவேற்றினார்கள், ஏன் ஆளுநருக்கு அனுப்பி - அனைத்துத் தரப்பிலும் பதற் றத்தை ஏற்படுத்த, இத்தனை மாதம் கிடப்பில் போட்டார்கள் என்பது தனி விவாதத்திற்குரியது; விளக்கம் தரப்பட வேண்டியது.


இவ்வளவு காலம் மாணவர்களையும், பெற்றோரையும் ஏக்கத்திற்கும் ஏமாற்றத் திற்கும் உள்ளாக்கியது ஏன் என்பது தனிக் கேள்வி என்றாலும், மேலும் தாமதிக்காமல் இந்த இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்திட, உடனடியாக கலந் தாய்வு தேதிகளை அறிவித்து நடவடிக்கை எடுத்திட வேண்டும்.


ஒருமனதாகச் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா தமிழக ஆளுந ரிடம் நிலுவையில் உள்ளது. திமுக சார்பில் கடிதம் எழுதி - போராட்டம் நடத்தி - மத்திய உள்துறை அமைச்சருக்குத் திமுக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் எல்லாம் கடிதம் எழுதி கோரிக்கை வைத்தும், மத்திய பாஜக அரசோ - தமிழக ஆளுநரோ தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இந்த இட ஒதுக்கீடு குறித்து இதுவரை கிஞ்சித்தும் கவலை கொண்டதாகத் தெரியவில்லை; மசோதாவிற்கு ஒப்புதல் கொடுங்கள் என்று ஆளுநருக்கு உரியபடி அறிவுறுத்தவும் இல்லை!


இந்தச் சூழ்நிலையில் அதிமுக அரசும் - தனது அதிகாரத்தைப் பயன் படுத்தி - பாஜகவுடன் கூட்டணியாக உள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தி ஆளுநரின் ஒப்புதலைப் பெறுவதற்குப் பதில் - இப்போது அரசாணை வெளி யிட்டிருக்கிறது. இதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு என்றால், இந்த உத்தரவை 45 நாட்களுக்கு முன்பே வெளியிட்டிருக்கலாம். இந்த அரசாணை சரியா தவறா - அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்றெல்லாம் பொது விவாதம் இப்போது தொடங்கி விட்டது.


இதற்கிடையில் அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஆளுநரின் ஆணைப்படி (“By order of Governor”) என்று வெளியிட்டிருப்பது - வழக்கமான நிர்வாக நடைமுறையா அல்லது ஆளுநரிடம் அந்தக் கோப்பில் கையெழுத்து வாங்கப் பட்டுள்ளதா? என்பதும் தெரியவில்லை. இதுகுறித்தெல்லாம் தமிழக அரசு தெளிவு படுத்த வேண்டும்.


இவை ஒருபுறமிருக்க, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை இந்த ஆண்டே அமல் படுத்தும் வகையில், உடனடியாக மருத் துவக் கவுன்சிலிங் தேதிகளை அறிவித்து - மருத்துவக் கல்லூரி களில் மாணவர் சேர்க்கையைத் தொடங்கிட வேண்டும் என்றும், அரசாணை வழியாக வழங்கப்பட்டுள்ள இந்த இட ஒதுக்கீட்டிற்கு, எவ்வித இடையூறும் நேர்ந்து விடாமல் தடுக்க வேண்டிய மிக முக்கியக் கடமையை அதிமுக அரசு கண்ணும் கருத்துமாக - மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கை உணர்வுடனும் நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள் கிறேன்''. இவ்வாறு மு.க. ஸ்டாலின் தெரி வித்துள்ளார்.


ராமதாஸ்


பா.ம.க. நிறுவனர்


தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க அரசாணையை அரசு வெளியிட்டிருக்கிறது. இந்த அரசாணை மாணவர்கள் மத்தியில் நிலவும் பதற்றத்தை போக்க வேண்டும்.


சட்டப் பேரவையில் நிறைவேற்றப் பட்ட சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் நிலையில், இப்படி ஓர் அரசாணையை பிறப்பித்திருப்பது நீதிமன் றத்தின் ஆய்வில் தாக்கு பிடிக்குமா என தெரியவில்லை. எனவே, ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்து, அரசின் சட்டத்திற்கு ஒப்புதல் பெற்று 7.5% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த விஷயத்தில் அவசரப்பட்டு மருத்துவ மாணவர் சேர்க்கை அறிவிக்கையை வெளியிடக் கூடாது.


இந்த அரசாணையை எதிர்த்து நீதி மன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டால், அதை, தலைசிறந்த உச்சநீதிமன்ற வழக் கறிஞர்களை நியமித்து, வலிமையாக எதிர் கொண்டு 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு சட்ட பாதுகாப்புகளை தமிழக அரசு செய்ய வேண்டும்.


இரா.முத்தரசன்


மாநிலச் செயலாளர்,


இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி


மத்திய பாஜக அரசு அறிமுகப்படுத்திய நீட் தேர்வு முறையால் தமிழகத்திற்குக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மருத்துவக் கல்வி பெறும் கனவுகளோடு இருந்த அரியலூர் அனிதா தொடங்கி 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிர் பலியானார்கள். இந்தப் பதற்ற நிலை இன்னும் தொடர்கிறது.


மருத்துவக் கல்லூரிகள் அதிகம் உள்ள தமிழ்நாட்டில், மாணவர்கள் மருத்துவக் கல்வி பெறும் வாய்ப்பைப் பாதுகாக்க வேண்டும் எனப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.


இந்தச் சூழலில் அரசுப் பள்ளியில் மாணவர்கள், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்போருக்கு, இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் சட்ட முன் வடிவை தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறை வேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்தது.


அரசமைப்பு அதிகாரத்தின் படி, மாநில அமைச்சரவையின் ஆலோசனைகளை ஏற்க வேண்டிய கடமைப் பொறுப்பை ஆளுநர் அலட்சியம் செய்து, இன்னும் மூன்று, நான்கு வார கால அவகாசம் தேவை என கூறியிருந்தார்.


இந்த நிலையில் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அராசணை வெளியிட்டிருப்பதும், நடப்பாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசாணைப்படி 7.5 சதவீத இடங்களை அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்க வேண்டும் என அரசாணை தெளிவுபடுத்தியுள்ளது.


ஆளுநர் ஒப்புதல் குறித்த சர்ச்சைக்கு மத்தியில் 7.5% இட ஒதுக்கீட்டுக்கான அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு பாராட்டி வரவேற்கிறது. இதே போல், மாநில அரசின் உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதி காட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறது.


 தொல் திருமாவளவன்


தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி


"அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 10 சதவீத இட ஒதுக்கீட்டை அறிவித்த புதுவை முதல்வர் வே. நாராயணசாமியை சந்தித்து எங்களது கட்சி சார்பில் வாழ்த்துகளையும், பாராட்டு களையும், நன்றியையும் தெரிவித்தேன்.


தமிழகத்தில் அரசுப் பள்ளி மாண வர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் ஒன்றரை மாதங்களுக்கு மேலாக காத்திருந்தும் ஆளுநர் அதில் கையொப்பம் இடாமல் கிடப்பில் போட்டுவிட்டார்.


இதனிடையே ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்காமல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முதல்வர் துனிந்து முடிவெடுக்க வேண்டும் என விசிக கோரிக்கை விடுத் திருந்தது. இந்நிலையில், தற்போது தமிழக அரசு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் விசிகவின் கோரிக்கை நிறைவேறியுள்ளதற்கு மகிழ்ச் சியடைகிறோம். அந்த அரசாணையில் தமிழக அரசு எந்த குளறுபடியும் நேராமல், வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த வேண் டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.


ஜி.கே.வாசன்


தலைவர், தமிழ் மாநில காங்கிரஸ்


மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு என்பது கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கவே. இதனை தமிழக அரசு சட்டப்பேரவையில் மசோதாவாக நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி 45 நாட்கள் ஆகின்றன. ஆனால், இதுவரை ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இன்னும் மூன்று, நான்கு வாரங்கள் அவகாசம் கேட்கிறார்.


இத்தகைய சூழலில் இதனுடைய முக் கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் தமிழக அரசு நேற்று மாலை அரசாணை வெளியிட்டு இருக்கிறது. பெற்றோர்கள், மாணவர்கள் குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்களுடைய எண்ணங்களையும் எதிர்பார்ப்பையும் கருத்தில் கொண்டு இனியும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக ஆளுநர் இந்த முக்கிய மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தமாகா வலியுறுத்துகிறது.


கற்பக விநாயகம் 


ஓய்வு பெற்ற நீதிபதி


“இந்த அரசாணையை ஏற்று ஆளுநர் உடனடியாக அங்கீகரித்தால் மாணவர்களுக்குப் பயனாக இருக்கும். அரசும் எத்தகைய சூழ்நிலையில் மாணவர்கள் நலனுக்காக அரசா ணையை வெளியிட்டோம் என ஆளுநரைச் சந்தித்து விளக்கி ஒப்புதல் பெற்று நிலைமையைச் சுமுகமாக முடிக்கவேண்டும்” என ஓய்வுபெற்ற நீதிபதி கற்பக விநாயகம் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment