ஒற்றைப் பத்தி - அய்யா எழுதிய முதல் சித்திரபுத்திரன் சித்திரம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 29, 2020

ஒற்றைப் பத்தி - அய்யா எழுதிய முதல் சித்திரபுத்திரன் சித்திரம்!


ஒரு பெரிய மனிதர் வீட்டுக்கு ஒரு சாஸ்திரி வந்தார்.


பெரிய மனிதர்: வாருங்கள் சாஸ்திரிகளே, உங்களை வரவழைக்க வேண்டுமென்றி ருந்தேன்- நீங்களே வந்துவிட்டீர்கள்.


சாஸ்திரி: அப்படியா, என்ன விசேஷம்?


பெரிய மனிதர்: ஒன்றுமில்லை; ஒரு தத்துக்கிளியினை கழுத்தில் ஒரு பையன் கயிறு கட்டி இறுக்கி அதைக் கொன்று விட்டான். இதற்கேதாவது பிராயச்சித்தம் உண்டா?


சாஸ்திரி : ஆஹா, உண்டு! அவன் பெற்றோர் தங்கத்தினால் 108 தத்துக்கிளி செய்து 108 பிராமணர்களுக்குக் கொடுத்துவிட்டால் அந்தப் பாவம் தீர்ந்துபோகும்-இல்லாவிட்டால் அந்தப் பையனைப் பார்க்கவே கூடாது.


பெரிய மனிதர்: தத்துக்கிளியின் கழுத்தில் கயிறு கட்டி இறுக்கிக் கொன்றது தங்களுடைய மகன் தான். அதற்கு வேண்டியதைச் சீக்கிரத்தில் செய்துவிட்டு வாருங்கள்.


சாஸ்திரி : ஆ! ஹோ! பிராமண பையனா?


அப்படியானால் இனிமேல் அப்படிச் செய்யாதே என்று சொல்லிவிட்டால் போதும்!


‘‘குடி அரசு'' 16.8.1925


‘‘நான் வெறும் பேச்சாளன் அல்ல; படிப்பாளியும் அல்ல. நான் ஒரு கருத்தாளி'' (‘விடுதலை', 26.10.1964) என்று தன்னைப்பற்றி வெகு அடக்கமாகச் சொன்னவர் பெரியார்.


மேலே எடுத்துக்காட்டப்பட்டு ள்ள, ‘சித்திரப் புத்திரன்' என்ற புனைப் பெயரில் தந்தை பெரியார் எழுதியதைப் படிக்கும் எவருக்கும் என்ன தோன்றும்?


சிந்தியுங்கள்!


பெரியார் எழுத்தாளர் அல்லர். எனவே, அவர் படம் வைக்கவில்லை என்று கூறும் தமிழ் வியாபாரிகள் சிந்திப்பார்களாக!


 - மயிலாடன்


No comments:

Post a Comment