பாம்செப் BAMCEF (தேசிய அளவிலான பார்ப்பனர் அல்லாதார் அமைப்பு) அமைப் பின் வழக்குரைஞர் பிரிவின் குஜராத் மாநிலத்தின் தலைவராக தீவிரமாக களப் பணி செய்து வந்த வழக்குரைஞர் தேவ்ஜி மகேஷ்வர் என்பவர் ராவல் என்ற பார்ப் பனர் மற்றும் அவரின் கூட்டாளிகள் 9 நபர்கள் மூலம் படுகொலை செய்யப்பட்டார்.
அவரின் படுகொலைக்கு காரணமான வர்களை 24 மணி நேரத்தில் கைது செய்ய வேண்டும் என கெடு விதிக்கப்பட்டது.... இல்லை என்றால் குஜராத் மாநிலம் முழு வதும் முழு அடைப்பு (பந்த்) செய்யப் போவதாக BAMCEF அமைப்பின் தேசிய தலைவர் வாமன் மேஸ்ராம் அறிவித்தார்.
இதனால் குஜராத் காவல்துறைக்குக் கடுமையான நெருக்கடிகள் ஏற்பட்டதால், இதற்கு பயந்து படுகொலைக்குக் காரண மானவர்களை குஜராத் அரசு உடனடியாக கைது செய்துள்ளது.
இந்நிலையில், படுகொலைக்குக் காரண மானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதற்காக குஜராத் மற்றும் வட இந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இப்போது குஜராத் தேசிய நெடுஞ்சாலைகள் அனைத்திலும் மறியல் நடைபெற்று வருகிறது.
‘‘இதுபோன்ற பல படுகொலைகளை செய்தாலும் இறுதிவரை துணிவுடன் மண் ணின் மைந்தர்களின் (SC,ST,OBC & RELIGION MINORITIES) விடுதலைக்காகப் போராடுவோம். தற்போது பார்ப்பனர் களுக்கு எதிராக மண்ணின் மைந்தர்கள் இந்தியா முழுவதும் ஒருங்கிணைய நேரம் வந்துவிட்டது. இப்போது பார்ப்பனர்கள் இதுபோன்ற படுகொலைகள் மூலம் இத னைத் துவங்கி வைத்துள்ளனர்..... நாம் முடித்து வைப்போம்... விடுதலையுடன்.... சட்டரீதியாக'' என்று ‘பாம்செப்' அமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது.
No comments:
Post a Comment