உலகம் முழுவதும் 3 கோடியே 38 லட்சம் பேருக்கு கரோனா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 30, 2020

உலகம் முழுவதும் 3 கோடியே 38 லட்சம் பேருக்கு கரோனா


ஜெனீவா, செப்.30  உலகம் முழு வதும் கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண் ணிக்கை 3 கோடியே 38 லட்சத்தை கடந்தது.
சீனாவில் ஹூபேய் மாகாணம் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப் பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்  பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 



ஆனாலும் கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 38 லட்சமாக அதிகரித் துள்ளது. குறிப்பாக இந்தியாவில் கரோனா தீவிரமடைந்துள்ளது. இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 70 ஆயிரத்து 589 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 44 ஆயிரத்து 227 பேருக்கும், பிரேசிலில் 31 ஆயிரத்து 990 பேருக்கும் புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் உலகிலேயே கரோனா அதி வேகமாக பரவும் நாடுகள் பட் டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.


தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 3 கோடியே 38 லட்சத்து 32 ஆயிரத்து 711 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.  வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 76 லட்சத்து 82 ஆயிரத்து 429 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்து 620 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.  வைரஸ் பாதிப்பில் இருந்து 2 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளன. ஆனாலும், கரோனாவால் இதுவரை 10 லட்சத் துக்கும் அதிகமானோர் உயிரிழந் துள்ளனர்.


No comments:

Post a Comment