ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 5, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:



  • கரோனா வைரஸ் தடுப்பு மருந்து வரும் ஆகஸ்டு 15ஆம் தேதிக்குள் கண்டுபிடிக்க ஆராய்ச்சிகள் நடப்பதாகக் கூறிய இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு, தற்போது மேலும் ஓர் ஆண்டு ஆகும் என அறிவித்துள்ளது.

  • கரோனா தொற்று பற்றிய அறிவிப்பைத் தங்கள் நிறுவனத் தின் சீன அலுவலகம் தான் முதலில் வெளியிட்டது, சீன நாடு அறிவிக்கவில்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது.


டெக்கான் கிரானிகல், சென்னைப் பதிப்பு:



  • கீழடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சியில், நான்கு எடைக் கற்கள் கிடைத்துள்ளன. கி.மு. 6ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 1ஆம் நூற்றாண்டு வரை வணிகம் நடைபெற்றதற்கும் அதற்கு இந்த எடைக்கற்களைப் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.


இந்தியன் எக்ஸ்பிரஸ்:



  • சாத்தான்குளம் தந்தை மகன் காவல் நிலையத்தில் மரணம் அடைந்த வழக்கில், காவலர்களின் நண்பன் என்ற அமைப்பைச் சேர்ந்த ஆறு பேர் இதில் சம்மந்தப்பட்டிருக் கிறார்கள்.அவர்கள் அனைவரும் கைது செய்யப்படலாம் என்று சி.பி.சி.அய்.டி. அதிகாரி தெரிவித்துள்ளார். 27 ஆண்டுகளாக இயங்கி வரும் காவலர் நண்பன் அமைப்பு, கிராமங்களிலும் சிற்றூரிகளிலும் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும் அந்த அமைப்பை கலைத்து விட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

  • தனி மனித உரிமையில் சட்டத்திற்கும், நடைமுறைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. சாத்தான்குளம் காவல் நிலைய மரணம் புதிதல்ல. உச்ச நீதிமன்றத்தில் பழைய தீர்ப்புகள் உள்ளன என விரிவாக தனது கட்டுரையில் காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

  • அரசுக்கு உண்மைகளைக் கூறுபவர்களை தேசத்திற்கு எதிரானவர்கள் என ஆளும் கட்சி முத்திரைக் குத்துகிறது; பிரதமர் மோடிக்கு தற்போது தேவை, உண்மை பேசும் தேசிய வாதிகள் என எழுத்தாளர் தல்வீன் சிங் தனது கட்டுரையில் எழுதியுள்ளார்.


நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:



  • இந்திய-சீன எல்லைப் பிரச்சினையில், உண்மையை நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி தெரிவிக்க வேண்டும். அதுவே ராஜ தர்மம் என காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் தெரிவித்து உள்ளார்.

  • பிரதமர் மோடி லடாக் பகுதியில் ராணுவ வீரர்களைச் சந்தித்த புகைப்படத்தையும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராணுவ வீரர்களைச் சந்தித்த புகைப்படத்தையும் வெளி யிட்டு, படங்களே உண்மை சொல்லும் என தெரிவித்துள்ளார்.


தி இந்து:



  • எஸ்.சி.,எஸ்.டி., ஓபிசி பிரிவினர்க்கான இடஒதுக்கீட்டை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., திட்டமிட்டு உள்ளது என அரியானா மாநில காங்கிரஸ் தலைவர் செல்ஜா குற்றம் சாட்டியுள்ளார்.


- குடந்தை கருணா,


5.7.2020


No comments:

Post a Comment