மருத்துவ மாணவர்களுக்கான காணொலிக் காட்சியில் கலந்து கொண்ட மருத்துவர்களின் பிரபதிபலிப்புகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 7, 2020

மருத்துவ மாணவர்களுக்கான காணொலிக் காட்சியில் கலந்து கொண்ட மருத்துவர்களின் பிரபதிபலிப்புகள்


தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கருத்துரையுடன், 5.7.2020 அன்று நடைபெற்ற "மருத்துவக் கல்வியில் சமூகநீதி" தலைப்பில், மருத்துவ கல்லூரி திராவிட மாணவர் கழகம் நடத்திய காணொலி கலந்துறவாடலில் பங்கேற்ற மருத்துவ மாணவர்கள், மருத்துவர்கள், கழகத் தோழர்கள். (புகைப்படம் உதவி: சங்கநிதி, திராவிட மாணவர் கழகம், வேலூர்).


ஆசிரியர் அய்யா அவர்களுக்கு, வணக்கம்.


5.7.2020 அன்று நடந்த மருத்துவ மாணவர்களுக் கான ‘இட ஒதுக்கீடு - சமூகநீதி’ குறித்த Zoom கூட்டத் தில் நீங்கள் ஆற்றிய உரையை முழுவதும் கேட்கும் வாய்ப்பு பெற்றேன். அடுக்கடுக்காக எத்தனை தகவல் களை ஆணித்தரமாக வைத்தீர்கள். நிறைய புதிய தகவல்கள் கிடைத்தன.


சித்தாந்த ரீதியில் நடக்கும் இந்த சமூக நீதி போராட் டத்தில் மக்களைத் தயார்படுத்தும் வேலையை நிச்சய மாக நாங்கள் செய்வோம்.


இந்த கூட்டத்து இணைப்பை பல மருத்துவர் குழுவிற்கு உரிய நேரத்தில் அனுப்பியதால் அவர்கள் அனை வருமே தங்கள் உரைமூலம் தெளிவடைந்து என்னிடம் தொலைபேசிவாயிலாக தொடர்பு கொண்டார்கள்.


எனவே நீங்கள் சொன்னதுபோல தமிழ்நாடுதான் இதற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய தருணமாக உள்ளது. ஒத்த கருத்துள்ளவர்களோடு நாம் ஆரம்பித்து வைத்தால் சரியாக இருக்கும். உங்கள் விருப்பப்படி சமூக ஊடகங்கள் மூலமாக கருத்தை விரைந்து பரப்புவோம் என உறுதி கூறுகிறோம் . நன்றி அய்யா.


ஞிக்ஷீ. கு.முத்துக்குமார் MD Dch


குழந்தை மருத்துவ பேராசிரியர், திருச்சி


- - - - -


Good evening sir, Extremely honoured and grateful for being given the opportunity to witness your oration yesterday. This is Kayal D/o Vennila Mahendran (Engineer S. Manoharan Brother). Evidently being a solid victim of the NEET, I’m still able to pursue quality dental education in one of the top dental schools in the world on par with the so called FC. Such incredible things have been possible owing to your continuous care and rage against social injustice in medicine. I find people starring at me in awe and shock when I display equal competence in my university which has only about 50% of our native population. Thank you sir.. for making us (the present generation) imbibe and reflect that Social Justice in Medicine is definitely a basic need of the hour.


- மருத்துவ மாணவர் ம.கயல்


சவீரா பல் மருத்துவக் கல்லூரி


- - - - -


5.7.2020 அன்று மருத்துவக் கல்லூரி திராவிட மாணவர் கழகம் நடத்திய காணொலி சிறப்புக் கூட்டத்தில் "மருத்துவக் கல்வியில் சமூகநீதி" என்ற தலைப்பில் தாங்கள் ஆற்றிய உரையின்மூலம் சமஸ் கிருதம் படித்த பார்ப்பனர்கள் மட்டுமே மருத்துவம் படிக்க இயலும் என்ற நிலையினை மாற்றி தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களும் மருத்துவக் கல்வி பயில நீதிக்கட்சி அரசு சட்டங்களில் திருத்தம் செய்ததையும், பெரியார் நடத்திய போராட்டங்களையும் அறிந்து கொண்டேன். மேலும்  ராஜாஜி முதல்வராக இருந்தபோதே நம்மை மேலும் அடிமையாக்கிட குலக்கல்வி கொண்டு வந்தபோது, அய்யா பெரியார் அவர்கள் போராடி அறியாமையில் இருந்த திராவிட மக்களை ஒன்றிணைத்து தமிழகத்தில் திராவிட ஆட் சியை அமையச் செய்து அதன்மூலம் சமூக நீதி கிடைத் திட பாடுபட்டுள்ளதையும், அன்றைய காலகட்டத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளையும் தங்களின் உரையின்மூலம் அறிந்துகொள்ளும் வாய்ப்பினைப் பெற்றேன்.


கிராமப்புற மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்களின் வாய்ப்பினை பறிக்கும் நீட் தேர்விற்கு எதிராக, தாங்கள் மேற்கொண்டுவரும் பணிகளையும், 'விடுதலை' பத்திரிகையின் வாயிலாக கட்டுரைகள் மூலம் சமூகநீதி காத்திட தங்களின் அயராத போராட்டத்தினையும் அறிந்து கொண்டேன் என்பதனை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


தந்தை பெரியார் கடவுள் மறுப்பு வாசகங்களை உலகுக்கு வழங்கிய விடயபுரத்தில், ஒரு திராவிடர் கழகக் குடும்பத்தில் பிறந்த நான் பள்ளியில் நடைபெற்ற போட்டிகளில் பெரியாரை பற்றி பேசியும், அவர் வேடமணிந்து நடித்தும் பல பரிசுகளை பெற்றுள்ளேன். தங்களின் தலைமையின்கீழ் என்னால் ஆன பணி களை செய்திட என்றும் கடமைப்பட்டுள்ளேன் என பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


- மருத்துவ மாணவர் க.கர்ஷினி, திருவாரூர்


- - - - -


ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம்.


வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!


"மருத்துவக் கல்வியில் சமூக நீதி" நிகழ்ச்சியில் தங்களுடைய உரை மிகவும் முக்கியமான ஒன்றாக அமைந்தது. மேலும் பல புதுமையான கருத்துக்களை தெரிந்து கொண்டேன். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி


- இரா.சூரியக்கலா, சத்யசாய் மருத்துவக்கல்லூரி.


- - - - -


It was a very informative session. I could not skip a single second in it. Gained a lot of knowledge through the session, particularly the history before independence. I'm glad that had the opportunity to attend it. Looking forward to attend great sessions like this. Thanks a lot.


- Dr.Ashok kumar, M.D (General Medicine) 
3rd year, Stanley medical college, Chennai


- - - - -


மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு,


"மருத்துவத் துறையில் சமூக நீதி" என்னும் இணைய வழி உரையாடலில் கலந்து கொண்டேன். என் நண்பன் மானவீரன் மூலம் தான் திராவிடர் கழகம் எனக்கு அறிமுகம். நாங்கள் இருவரும் மருத்துவ மேல் படிப்பிற்கு நீட் தேர்வுக்கு பயிற்சி வகுப்புக்கு ஒன்றாக சென்று படித்து வந்தோம். ஒரு நாளைக்கு குறைந்தது பத்து முறையாவது பெரியார் பெயரை உச்சரித்து விடுவான். என்னிடம் அவன் அடிக்கடி கூறியது, வர லாறு பலரால் திரிக்கப்பட்டு நமக்கு திணிக்கப்படுகிறது. எந்தச் செய்தியாய் இருப்பினும் அது யார் கூறியது என்பது முக்கியம் என்றும், ஆசிரியர் கூறினால் அது 100 சதவீதம் நம்பகத்தன்மை உடையது என்றும் சொல்லுவான். என்னை இரு முறை நமது கழகக் கூட்டத்தில் பங்கேற்க அழைத்தான். சில காரணங்களால் என்னால் பங்குபெற இயலவில்லை.


ஆனால் கரோனாவால் நடந்த நல்லதோ என் னவோ இந்த Zoom வாய்ப்பு அமைந்தது.வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வில், நீதிக்கட்சி மற்றும் நமது கழகத் தின் வரலாற்றை, ஒரு வரலாறே சொல்லி இருப்பது சிறப்பம்சம்.


நான் இன்று மருத்துவனாகத் திகழ்வதற்கு, எண்பது, நூறு ஆண்டுகளுக்கு முன்னரே நமது கழகமும், தமிழகத்தின் முதல் பேராசிரியர் எனது அருமை தாடி தாத்தா பெரியார் அவர்களும் உழைத்த வரலாற்றை எளிதாக புரிந்து கொள்ளும் வண்ணம் நீங்கள் சொன்ன தற்கு நன்றி! அய்யா... தள்ளாடும் வயதிலும் மூத்திரச் சட்டியை ஏந்திக் கொண்டு எந்த அரசியல் நோக்கமும் இன்றி சமுதாய நோக்கத்துடன் பெரியார் எவ்வாறு உழைத் தாரோ, அதே போல அவரது வழியில் நடக்கும் நீங்கள் சமூக நீதிக்காக அயராது உழைப்பது எங்களுக்கு புத்துணர்ச்சியையும், நம்பிக்கையையும் கொடுக்கிறது.


நான் படித்தேன், மருத்துவன் ஆனேன் என மார் தட்டிக் கொண்டிருந்தேன். படிக்கவே எங்களுக்கு வாய்ப்பு புறக்கணிக்கப்பட்ட நிலையை அகற்ற நமது கழகத்தின் போராட்டத்தை அறிந்தேன்.


இத்தகைய காணொலிக் கூட்டத்தில் பங்கேற்றதில் பெருமையோடு, ஆசிரியர் அவர்களுக்கு நன்றியை யும், வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்


இப்படிக்கு,


சுப்பிரமணி - ஆதிலட்சுமியின் மகன்


Dr.சு.கவுதமன், M.D (Pulmonology)


இரண்டாம் ஆண்டு. கோவை மருத்துவக் கல்லூரி.


- - - - -


It was a nice speech to hear about the history of social justice and heard a lot of new histories..thank you for your speech sir and thanks to Maanaveeran for giving us opportunity to listen to this speech.
- Dr.M.Ramesh kumar, 2nd year DNB Anaesthesia, NHMMI Hospital,Raipur. Native-Madurai.


- - - - -


வணக்கம்


கடந்த ஞாயிற்றுக்கிழமை "மருத்துவக் கல்வியில் சமூக நீதி" என்ற தலைப்பில் காணொலிக் கலந்துரை யாடல், அதனில் கலந்து கொண்டு தத்தமது கருத்துக் களைத் தெரிந்துகொண்டு பல புரிதல்களை நான் ஏற் படுத்திக் கொண்டேன். குறிப்பாக என் பாசமிகு தோழன் மருத்துவர் மானவீரன் அதில் முக்கிய பங்கு வகிப்பதை என் கண்களால் காண மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். உடலியல் பாடத்தின் HOMEOSTASIS என்ற பாடத்தின் மூலம் சமூக நீதி மற்றும் இட ஒதுக்கீடு குறித்து எடுத்து சொல்லியது மருத்துவர்களுக்கு தெள்ளத் தெளிவாக ஒரு புரிதலை ஏற்படுத்தியது. ஆசிரியர் அய்யா கூறியதும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இதுபோன்ற காணொலிக் கலந்துரையாடல்கள் பின்னாட்களில் நிறைய இடம் பெறவேண்டும் என்று ஒரு மருத்துவராக நான் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.


- மரு.சுப ஜோதி குமார்


MS.(ENT) மூன்றாமாண்டு,


திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி


- - - - -


தலைவர் அவர்களின் உரையில் பல அரிய தகவல் கள்... நாம் ஒவ்வொருவரும் இந்த இயக்கத்தினால் மேம்பட்டிருக்கிறோம்.. இலக்கு இன்னும் வெகு தொலைவில் உள்ளது.. பயணம் மேலும் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்...


- பாண்டி ராஜ், IRS, கொல்கத்தா.


கடிதங்கள் நாளையும் தொடரும்


No comments:

Post a Comment