செய்தித் துளிகள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 8, 2020

செய்தித் துளிகள்....

* சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்திலும் 30 விழுக்காடு குறைப்பு!


* கரோனா பாதிப்பால் வருமானமிழந்த குடும்பங்கள், சென்னையைக் காலி செய்கின்றன.


* சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் 750 படுக்கைகளுடன் கரோனா மருத்துவமனை!


* ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்குத் தடை கோரிய வழக்கு: தமிழக உள்துறைச் செயலாளருக்கும், காவல்துறைத் தலைமை இயக்குநருக்கும் (டி.ஜி.பி.க்கும்) மனித உரிமை ஆணையம் தாக்கீது!


* புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் மகன் மன்னர் மன்னன் உடல், புரட்சிக்கவிஞர் நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது - புதுவை முதலமைச்சர் வி.நாராயணசாமி இறுதி மரியாதை செலுத்தினார்.


* கன்னியாகுமரி அருகே கொட்டாரம் ராமன் கோவிலில் ராமன் சிலை திருட்டு!


* பொதுவாக இந்தியாவில் நாள்தோறும் இறப்பு 25,250. காரோனா மூலம் இறப்பு - சராசரி 400 முதல் 600 வரை.


* சாத்தான்குளம் தந்தை மகன் காவல் நிலைய மரணம் - சி.பி.அய். விசாரணைக்கு மத்திய அரசு அனுமதி!


* தமிழ்நாட்டில் நகராட்சி, மாநகராட்சிகளுக்குத் தேர்தல் நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு - ஏற்பு!


No comments:

Post a Comment