பெரியார் கேட்கும் கேள்விகள்! (36) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 6, 2020

பெரியார் கேட்கும் கேள்விகள்! (36)


மதக்குறி என்பது மாட்டு மந்தைக்காரன் தனது மாடுகளுக்குப் போடும் அடையாளம் போலவே, மதத்தலைவர் தனது மதத்தைப் பின்பற்றுகின்றவர்கள் என்பதைக்காட்ட ஏற்படுத்திக் கொண்ட குறியேயல்லாமல் வேறு என்ன?


- - - - -


இந்துமதத்தின் கல்வித் தெய்வமும், செல்வ தெய்வமும், பெண் தெய்வங்களாயிருந்தும் இந்து மதக் கொள்கையின்படி பெண்களுக்குக் கல்வியும் சொத்துக்களும் இருக்க இடமில்லை. - ஏன்? ஏன்?


- - - - -


இந்தியாவில் காகிதம், புஸ்தகம், எழுத்து, எழுது கருவி எல்லாம் சரஸ்வதியாகப் பாவிக்கப்பட்டு வணங்கி வந்தும் 100க்கு 10 பேர்களே படித்திருக்கின்றார்கள். - ஏன்? ஏன்?


- - - - - -


இந்தியாவிலுள்ள தொழிலாளிகள் தங்கள் ஆயுதங்களை யெல்லாம் சரஸ்வதியாகக் கருதி பூஜை செய்தும், இந்தியர்கள் தொழிலில்லாமல் கப்பலேறி வேறு நாட்டிற்குக் கும்பல் கும்பலாய் போய் மடிகிறார்கள். - ஏன்?


- 'குடிஅரசு' - துணுக்குகள் - 20.09.1947


- ‘மணியோசை’


No comments:

Post a Comment