செய்தித் துளிகள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 5, 2020

செய்தித் துளிகள்....

* சென்னையில் நாளை முதல் ஊரடங்கு தளர்வு  - மதுரையில் 12 ஆம் தேதிவரை முழு ஊரடங்கு.


* ஓமாந்தூர் மருத்துவக் கல்லூரி டீனாக டாக்டர் ஜெயந்தி நியமனம்.


* புனேயில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள தங்க முகக்கவசம் ஒன்றைத் தயாரித்து அணிந்துள்ளார் தொழிலதிபர் சங்கர் குராடே!


* 2036 வரை ருசிய அதிபராக புதின் தொடரும் வகையில் ருசிய அரசமைப்புச் சட்டத் திருத்தம்!


* கரோனாவைக் கட்டுப்படுத்த தமிழக அரசிடம் - தொலைநோக்குத் திட்டம் இல்லை - பூர்ணலிங்கம் அய்.ஏ.எஸ். குற்றச்சாட்டு.


* மருத்துவர்கள், செவிலியர்களுக்கு ஏற்பட்ட கரோனா தொற்றால் சென்னை விஜயா மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டது.


* தமிழகத்தில் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்கப்படும் - விற்பனையாளர்கள் சங்கம் அறிவிப்பு.


* கரோனா தொற்று மாயமாகப் போய்விடாது என்று கூறுகிறது உலக சுகாதார நிறுவனம்.


* பறவைகள் பறக்கும் உயரத்தை வைத்து கால நிலையைக் கணிக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.


 


No comments:

Post a Comment