அரியலூர் மாவட்டத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 25, 2020

அரியலூர் மாவட்டத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி


ஜெயங்கொண்டம், மே 25 அரியலூர் மாவட்டத்தில் கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள கழகத் தோழர்களுக்கும், மக்களுக்கும் உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது. அரியலூர் மாவட்ட துணைத் தலைவர் இரா. திலீபன் ஒரு குடும்பத்திற்கு ரூபாய் 1500 மதிப்புள்ள (25 கி. அரிசி + மளிகை பொருட்கள் + காய்கறிகள்) பொருட்களை ஜெயங்கொண்டம் கே.பி. கலியமூர்த்தி மற்றும் கீழக்குடியிருப்பு கே.எம். சேகர் குடும்பத்திற்கு 20.5.2020 காலை வீட்டிற்கு சென்று அளித்தார். உடன் பொதுக்குழு உறுப்பினர் சி. காமராஜ் பங்கேற்றார். பின்னர் ஜெயங்கொண்டம் லெ. அர்ச்சுனன், தா. பழவூர் சிந்தாமணி இராமச்சந்திரன் குடும்பங்களுக்கும் உதவிப் பொருட்கள் அளிக்கப்பட்டது.


செந்துறை: 20.5.2020 அன்று செந்துறை ஒன்றியத்தில் சோ.க. சேகர், சி. கருப்புசாமி, விஷ்ணு, பெரியார் பெருந் தொண்டர் கோபால், பன்னீர்செல்வம், முத்தமிழ்ச்செல்வன் உள்ளிட்டவர்களுக்கு மாவட்ட துணைத்தலைவர் இரா. திலீபன் ஒரு குடும்பத்திற்கு ரூ.1500 மதிப்புள்ள உதவிப் பொருட்கள் வீதம் ஆறு குடும்பத்திற்கு வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன், மண்டல இ.அ.செயலாளர் பொன். செந்தில்குமார் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்று நன்றியும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.


No comments:

Post a Comment