விடுதலை வாசகர் சங்கிலி - குவியும் வாசகர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 27, 2020

விடுதலை வாசகர் சங்கிலி - குவியும் வாசகர்கள்

தமிழர் தலைவர் அய்யா அவர்களுக்கு வணக்கம்


வாசகர் சங்கிலி மூலம் உலகின் பகுத்தறிவு நாளேடு விடுதலையை வாட்ஸ்-அப் இணை வாயிலாக சுமார் 400 நண்பர்கள், உறவுகள், நிருபர்கள், அரசு ஊழி யர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், குருதிக் கொடை யாளர்கள் அனைவருக்கும் விடுதலை அனுப்பினேன். சிலர் படித்து இந்த கருத்து அருமை, ஆசிரியர் அறிக்கை சிறப்பு என்று நாம் உருவாக்கிய குருப்பில் பதிவிட்டும், தினந்தோறும் விடுதலை அனுப்புவும் வேண்டுகோள் வைக்கிறார்கள், சிலர் நாங்களும் விடுதலை பரவ செய்வோம் என்று உறுதி கூறினர் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


அன்புடன்


போடி சுருளிராசு,


மாவட்ட இளைஞர் அணி தலைவர்,


தேனி மாவட்டம்.


- - - - -


தமிழர் தலைவர் அவர்களுக்கு,


வணக்கம்.


தங்களின் கட்டளைப்படி நான் இடம்பெற்றிருக்கும் குழுக்களில் இடம்பெறாத 256 பேருக்கு முதல் குழுவாக இரண்டு நாட்களாக விடுதலையை அனுப்பிக்கொண்டு வருகிறேன். நன்றி.


"தமிழர் இல்லம் என்பதற்குச் சான்று விடுதலையே!"


"தமிழக மக்கள் ஆக்கப்பூர்வமாக சிந்தித்து முடி வெடுக்க இதுவே சரியான தருணம்." ஆசிரியர் மரியா தைக்குரிய கி.வீரமணி, அய்யா அவர்கள் கூறுவது போல் ஆக்கப்பூர்வமாக சிந்திக்க வேண்டும்.பல தொழில் நிறுவனங்கள் நடத்திய வட மாநிலத்தவர்கள் தற்போதைய சூழலில் சொந்த ஊர் சென்று விட்டனர். பணிகளுக்கும் எடுத்து நடத்துவதற்கும் நம் இளைஞர் களை தயார் படுத்திடவேண்டும்.சங்கடம் இல்லாது இப்போது நம் தமிழ் மக்கள் அனைத்து இடங்களையும் எளிதாக உள்நுழைவு செய்ய முடியும். தமிழ் இளைஞர் கள் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் தொழில் நிறுவனங்களையும் கையகப்படுத்த சரியான தருணம். ஆர்பாட்டம் இல்லாது அமைதியாக இந்த புரட்சிக்கு வித்திடுங்கள்.அனைத்து தொழில்களும் நம் கைக்கு வரவேண்டும்.


அன்புடன்


உதயச்சந்திரன்


புள்ளியியல் துறை (ஓய்வு),


தஞ்சாவூர்


- - - - - -


தர்மபுரி மாவட்ட கழகம்    


"எவரும் செய்ய முடியாததை நாம் செய்வோம், விடுதலை வாசகர்களை சங்கிலி மூலம் வரிந்து கட்டுங் கள், தோழர்களே" என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை ஏற்று விடுதலை தனது லட்சிய பயணத்தின் 86ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த இக்கட்டான நேரத்தில் விடுதலையை எந்த வகையிலாவது கழகத் தோழர்களையும் தாண்டி உறவுகள், நண்பர்கள், வணிக நட்புகள், அரசியல் தோழமைகள், என அனைவரிடத்திலும் விடுதலையை சேர்ப்பதில் கழகத் தோழர்கள் சளைத்தவர்கள் அல்ல.


அதன் அடிப்படையில் தர்மபுரி மாவட்ட கழகத் தோழர்கள் விடுதலையை பரப்பும் பணியை தொடங்கி இருக்கிறார்கள். தினம் தினம் வாசகர்களின் எண் ணிக்கை பெருகிக் கொண்டே இருக்கிறது, வாசகர் களும் படித்துணர்ந்து பதிலளிக்கிறார்கள்.


கரோனோ நெருக்கடி காலத்தில் வணிகரீதியாக (நெம்பர் 1, நெம்பர்2 என) வெளியான பத்திரிகைகள் எல்லாம் இன்று திணறி தள்ளாடி தடுமாறுகிறது! ஆனால்கொள்கை ஏடான விடுதலை எவ்வளவு சோதனைகள், அடக்குமுறைகள், இடர்பாடுகளையும் கடந்து சாதனை படைத்து உயர்ந்து நிற்கிறது. அதற்கு காரணம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடைய யுத்தி தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.  படித்ததோடு மட்டுமல்லாமல் தன்னோடு தொடர்பில் உள்ள வாசகர்களையும் படிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் அனைவரையும் கழகத் தோழர்கள் படிக்க வைக்க முயற்ற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.


தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு தோன் றிய யுத்தி வேறு யாருக்கும் தோன்றியிருக்காது. அந்த யுத்தியை பயன்படுத்தி தர்மபுரி மாவட்டத்தில் இது வரை தோழர்களால் வாசகர்களுக்கு அனுப்பப்பட்ட விடுதலை எண்ணிக்கை ஊமை ஜெயராமன் குழுக்கள் தனிநபர் வழியாக 766,  வீ.சிவாஜி 60, அ.தமிழ்ச் செல்வன் 86, தகடூர் தமிழ்ச்செல்வி 65, கரு.பாலன் குழு தனிநபர் வழியாக 813, கதிர் செந்தில் குழு தனிநபர் வழியாக 525, கே.ஆர்.குமார் குழுக்கள் வழியாக 210, த.யாழ் திலீபன் 176, மாரி. கருணாநிதி 60,இர.கிருட்டிணமூர்த்தி குழுக்கள் வழியாக 260, அர்ஜுனன் 10, காமராஜ் 20,  செல்லதுரை 25,  நடராஜ் ஆசிரியர் 32, சேட்டு 20, சிறீதரன் 38 என தோழர்கள் குழுக்கள் வழியாகவும்,  தனிநபர்களுக்குமாக மொத்தம் 3166 புதிய வாசகர்களுக்கு விடுதலை அனுப்பப்பட்டு வருகிறது.  மேலும்இப்பணி தொடரும்.....           


- சு.தமிழ்ச்செல்வன்


தருமபுரி


No comments:

Post a Comment