குடியரசுத்தலைவரின் மருத்துவ ஆலோசகர் கரோனாவால் மரணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 24, 2020

குடியரசுத்தலைவரின் மருத்துவ ஆலோசகர் கரோனாவால் மரணம்

புதுடில்லி. மே 24 எய்ம்ஸ் மருத்துவத் துறையின் முன் னாள் தலைவரும், நுரை யீரல் சிகிச்சையில் முன்னோடியு மான மருத்துவர் ஜிதேந்திர நாத் பாண்டே வயது 78 கரோனா தொற்று காரண மாக தனது இல்லத்தில் மரண மடைந்தார். 2003 ஆம் ஆண் டில் எய்ம்ஸ் நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்ற அவர், டில்லி  சீதாராம் பாரதியா மருத்துவ மனையில் நுரையீரல் துறை இயக்குநராகவும், பேரா சிரியருமாகவும் பதவி வகித்து வந்தார்.


தற்போதைய, குடியரசு தலைவர்  ராம் நாத் கோவிந்தின் தனிப்பட்ட மருத்துவ ராக இருந்த அவர், பல மதிப்புமிக்க விருது களையும் பெற்றவர். எய்ம்ஸ் இயக்குநர் மருத்துவர் ரன்தீப் குலேரியா, டாக்டர் பாண்டேவின் மரணம் தனிப்பட்ட இழப்பு என்று கூறினார். கரோனா தொற்று தொடர்பான சிகிச்சை அளித்து வந்த நிலையில் அவர் வீட்டிலேயே சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் குண மாகி விடுவார் என்ற நிலையில் அவருக்கு நோய் தொற்று அதிகரித்து மூச்சுத் திணறல்  மற்றும் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.


No comments:

Post a Comment