ஏட்டுத் திக்குகளிலிருந்து.. - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 25, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து..

டெக்கான் கிரானிகல், சென்னை பதிப்பு:



  • நாளும் அதிகரித்துவரும் கரோனா தொற்று காரணமாக சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள சென்னை நகரம், தொற்று நோயின் மய்யப்புள்ளியாக விளங்குகிறது.

  • இன்று முதல் உள்நாட்டு விமான சேவை 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசம் ஒன்றிலும், மிகுந்த கட்டுப்பாட்டு விதிகளுடன் துவங்குகிறது. தமிழ்நாடு, மகாராட்டிரம், மேற்கு வங்கம் ஆகிய மாநில முதல்வர்கள் இதற்கு ஒப்புதல் அளிக்காத நிலையிலும், குறைந்த விமான சேவையை தொடர மத்திய அரசின் விமான போக்குவரத்துத்துறை முடிவெடுத்துள்ளது.


நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், சென்னை பதிப்பு:



  • அம்பன் புயலால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள கொல்கத்தா நகரில் இராணுவம் அழைக்கப்பட்டு, மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. மாநில பாஜக மற்றும் ஆளுநர் ராணுவத்தை முன்னரே அழைத்திருக்க வேண்டும் என்ற கருத்து தெரிவித்தனர். இயற்கை அழிவு மீட்பில் மாநில அரசு துரிதமாக செயல்படும் வேளையில், தங்களது மதவாத அரசியலை திணிக்காதீர்கள் என பதிலடி தந்துள்ளார் முதல்வர் மம்தா பானர்ஜி.


இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லி பதிப்பு:



  • உ.பி. அரசு புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கென தனி ஆணையம் அமைத்துள்ள நிலையில், வேறு மாநிலங்கள் இந்த தொழிலாளர்களைப் பணிக்கு அழைத்தால், தங்கள் அரசின் ஒப்புதல் பெற வேண்டும் என உ.பி. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

  • கரோனா தொற்றுக்குப் பிறகான உலகில், சமத்துவம், மதச்சார்பின்மை, ஜனநாயகப் பண்புகள் இவற்றை உள்ளடக்கி செயல்பட முனையும் நாடுகளே முன்னோக்கி செல்லும் என மேனாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்கா - எழுத்தாளர் அடுல் கே.தாக்கூர் இணைந்து எழுதிய ‘உலகின் மறு உருவாக்கம்’ என்ற தலைப்பிட்ட கட்டுரையில் தெரிவித்துள்ளனர்.


நியூயார்க் டைம்ஸ்:


சுயாட்சி உரிமை பெற்ற ஹாங்காங் நகரில், சீன அரசின் புதிய கட்டுப்பாடு சட்டங்களை எதிர்த்து, கரொனா வைரஸ் நிலவும் சூழ லிலும், பல்லாயிரக்கணக்கில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


தி இந்து, சென்னை பதிப்பு:


வறுமையில் வாடும் மக்களுக்கு தேசிய ஊரக வேலைவாய்ப்பு பாதுகாப்புச் சட்டத்தின்படி பணியில் அமர்த்தி நேரடி பணம் வழங்கினால் மட்டுமே மிகப் பெரிய மனிதப் பேரழிவை தடுத்திட முடியும் என பொருளாதாரப் பேராசிரியர் ஜூன் டிரெட்ஜ் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.


எகனாமிக் டைம்ஸ், மும்பை பதிப்பு:



  • கரோனா தொற்று சிகிச்சையில் அகமதாபாத் அரசு மருத்துவமனையின் செயல்பாடு குறித்து குஜராத் நீதிமன்றம் குறித்து கவலை தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் அபிசேக் சிங்வி, மேற்கு வங்கத்திற்கு உள்துறை அமைச்சகம் பாய்ந்து சிறப்பு அதிகாரிகளை அனுப்பியது போல், குஜராத்திற்கும் அனுப்புவார்களா என கேள்வி எழுப்பியுள்ளர்.


- குடந்தை கருணா,


24.5.2020


No comments:

Post a Comment