செய்தித் துளிகள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 27, 2020

செய்தித் துளிகள்....

* இமாச்சலப் பிரதேசத்தில் ஊரடங்கு ஜூன் 30 வரை நீட்டிப்பு.


* பள்ளிகள் திறக்கப்படும் என்பது வதந்திதான் - மத்திய அரசு அறிவிப்பு.


* 10 இரயில்கள் மூலம் வெளி மாநிலத்தவர் தமிழ்நாட்டிலிருந்து இன்று அனுப்பப்படுகின்றனர்.


* இவ்வாண்டு இறுதியில் கரோனாவின் தொற்று மீண்டும் உச்சத்தை அடையும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை.


* ஜூன் ஒன்றாம் தேதிமுதல் விசைப் படகு மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லலாம்.


* கரோனா - குறைந்த பட்சம் ஏழு தடுப்பு மருந்துகள் உருவாக்கத்தின் தொடக்கக் கட்டத்தில் உள்ளதாக நரம்பியல் நிபுணர் மருத்துவர் ராஜேஷ் பாரிக் கூறுகிறார்.


* பிளஸ் டூ விடைத் தாள்கள் திருத்தும் பணி இன்று தொடக்கம்.


* 10 ஆயிரம் ஒப்பந்த செவிலியர்கள் தங்களை நிரந்தரம் செய்யச் சொல்லி கோரிக்கை அட்டை அணிந்து பணி.


* இலவச மின்சாரத்தை ரத்து செய்தால் சிறை நிரப்பும் போராட்டம் - தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு.


* வைரஸ் தொற்று அதிகம் காணப்படும் சென்னை பகுதிகளில் ஊரடங்கு தளர்வுகள் கூடாது - மருத்துவ நிபுணர்கள் முதலமைச்சரிடம் பரிந்துரை.


* தொழிலாளர்கள் நடந்து செல்லும் அவலம் - உச்சநீதிமன்றம் வருத்தம்.


* சீனாவின் எதிர்ப்பை மீறி சாலைப் பணிகள் தொடரும் - இந்தியா முடிவு.


* தமிழக அரசு ஓய்வு வயது உயர்வுக்கு எதிர்ப்பு - உயர்நீதிமன்றத்தில் வழக்கு.


* பிடல் காஸ்ட்ரோவின் ஆயுள் நீட்சிக்கு முருங்கைதான் காரணம் என்ற தகவல் வெளிவந்துள்ளது.


* இரகசிய குறியீட்டைச் சுமந்து, காஷ்மீருக்கு வந்த பாகிஸ்தான் உளவுப் புறா பிடிபட்டது.


No comments:

Post a Comment