ஏட்டுதிக்குகளிலிருந்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 22, 2020

ஏட்டுதிக்குகளிலிருந்து

டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:



  • வரும் மே 25-ஆம் தேதி முதல் நாட்டின் முக்கிய நகரங் களுக்கு விமானச் சேவையை தொடரவும், பயண நேரத்தைக் கொண்டு, குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசின் விமான போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

  • அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் கரோனா தொற்று காரணமாக பாதிக்க அதிக வாய்ப்பு உண்டு என மத்திய அரசு எச்சரித்துள்ளது. தெலங்கானா மாநிலத்தில் 60 லட்சம் முதியவர்கள் பாதிக்கப்படக்கூடும் என அச்சம் உள்ளது.

  • உ.பி. காங்கிரஸ் தலைவர் பிரியங்கா தர முன்வந்த 1000 பேருந்துகளைப் புறக்கணித்ததன் மூலம், புலம் பெயர்ந்த தொழிலா ளர்களே பாதிக்கப்படுகின்றனர் என தலையங்க செய்தி கூறுகிறது.


டெக்கான் கிரானிகல், சென்னை பதிப்பு:



  • பிரதமரின் பி.எம்.கேர்ஸ் பண்ட் பற்றி தனது டிவிட்டரில் தவறான செய்தியை வெளியிட்டார் எனக்கூறி, காங்கிரஸ் தலை வர் சோனியா காந்தி மீது கர்நாடகா மாநிலத்தில் சாகரா நகரத்தில் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

  • ரஷ்யாவில் இருந்து எஸ்.400 ஏவுகணையை வாங்கிய விவகாரத்தில் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரக் கட்டுப் பாடு விதிக்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்க தூதரக அதிகாரி கருத்து தெரிவித்துள்ளார்.


நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், சென்னை பதிப்பு:



  • தொழில்துறைக்கு வங்கிகள் அளிக்கும் கடன் தொடர்ந்து குறைந்து கொண்டு வரும் சூழலில், தற்போது அது 0.8% விழுக் காட்டிற்கும் கீழ் சென்றுவிட்டது.

  • சென்னைக்கு எந்த ரயிலும் வர வேண்டாம் என்ற தமிழக முதல்வர் கோரிக்கையினால், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் ஊருக்கு பயணம் மேற்கொள்ள ரயில் இன்றி அவதிக் குள்ளாகியுள்ளனர்.


இந்தியன் எக்ஸ்பிரஸ், புதுடில்லி பதிப்பு:



  • பத்திரிக்கைகள் மீதான அரசு தொடுத்த அவதூறு வழக்கு அனைத்தையும் ரத்து செய்து உத்தரவிட்ட சென்னை உயர் நீதி மன்ற நீதிபதிகள், அவதூறு வழக்கு என்ற பெயரில் ஜனநாயகத்தை நசுக்க முடியாது எனக் கருத்து தெரிவித்தனர்.


தினமணி, சென்னை பதிப்பு:



  • ரூ.20 லட்சம் கோடி நிதி உதவி என நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்தது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந் தாலும், தேன் வளர்ப்புக்கு நிதி உதவி என்பது உருப்படியான ஒரு நிதி ஒதுக்கீடு என தினமணி தலையங்கம் கூறுகிறது.


தி இந்து, சென்னை பதிப்பு:



  • கரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள முழு அடைப்பு, சமூகத்தில் உள்ள சமத்துவமின்மையை வெளிப்படுத்தி யுள்ளது. மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை மேற்கொள்வதற்குப் பதிலாக பாஜக அரசு தனியார்மயத்தை அதிகமாக ஊக்குவிக்கிறது என ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் அரசியல் பிரிவு பேராசிரியராக உள்ள ஜோயா ஹாசன் கட்டுரை வடித்துள்ளார்.


எகனாமிக் டைம்ஸ், மும்பை பதிப்பு:



  • உச்சநீதி மன்றத்தில் தலைமை நீதிபதியாக ஒரு மகளிர்: கருநாடக நீதிமன்றத்தில் தற்போது நீதிபதியாக உள்ள நாகரத்னா அம்மையார் உச்ச நீதிமன்ற நீதிபதியாக உடன் நியமிக்கப்பட்டால் 2027இல் அவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகும் வாய்ப்பு உள்ளது.


- குடந்தை கருணா,


22.5.2020


No comments:

Post a Comment