விடுதலை வாசகர் சங்கிலி - குவியும் வாசகர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 29, 2020

விடுதலை வாசகர் சங்கிலி - குவியும் வாசகர்கள்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.


கடந்த மார்ச் மாதம் கரோனா தொடங்கியவுடன் வீட்டில் முடங்கியிருந்த நிலையில் விடுதலையை அனைவருக்கும் அனுப்பலாமே என்று தோன்றிய வுடன் பிரின்சு என்னாரெசு பெரியார் சொன்ன ஆலோசனைபடி என் மகன் வி.பி.சிங்கிடம் இதற்கு வழியுள்ளதா எனக்கேட்டவுடன் பிராட்கேஸ்ட்  உரு வாக்கி தொட்டால் நம்மோடு தொடர்பில் இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் ஒருமுறை அனுப்பினால் போதும் என்று பிராட்கேஸ்ட் உருவாக்க சொல்லி கொடுத்ததோடு தினமும் விடுதலை நாளிதழை ஆசிரி யர் அறிக்கை தலையங்கம், வாழ்வியல் சிந்தனைகள் முக்கிய கட்டுரைகளை தனித்தனியாக வெட்டியெடுத்து எனக்கு கொடுத்ததை தனித்தனி தலைப்பிட்டு கடந்த 60 நாட்களுக்கு மேல் அனுப்பி வருவதோடு அதற்கு அனைவரிடத்திலும் வரவேற்பு உள்ளது என்பதை யும்அதன் வழி முறை நோக்கங்களை தென் மாவட்ட பொறுப்பாளர்கள் தோழர்களுக்கு அனுப்பி வைத்து தோழர்களை ஆயுத்தப்படுத்தியிருக்கிறேன். அத்து டன் மதுரையில் இருந்து காணொலி வழி கூட்டங்களாக பல்வேறு தலைப்புகளில் 16ஆவது கூட்டமாக நாளை நடைபெற இருக்கிறது.முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் அவர்கள் மாநில சுயாட்சி நேற்றும்... இன்றும் என்ற தலைப்பில் உரையாற்ற இருக்கின்றார் என்பதையும் தங்களின் மேலான பார்வைக்கு தெரிவித் துக் கொள்கிறேன்.


என்றும் தங்களின் உண்மையுள்ள


- வே.செல்வம்


அமைப்புச் செயலாளர்


- - - - -


உலகமே கொடிய கரோனாவின்  (கோவிட் - 19) கோரப் பிடியில் சிக்கித் தவிக்கின்ற இச்சூழலிலும் ஏராளமான நாளேடுகள் நாள்தோறும் வந்தவண்ணம் இருப்பது பாராட்டுக்குரியதாகும்.


கரோனா காலம் என்பது மக்களுக்கு மட்டுமன்றி அச்சு ஊடகத் துறைக்கும் ஒரு சவாலாகவே அமைந்து உள்ளது.


பத்திரிக்கைத் துறையில் ஜாம்பாவன்களாகத் திகழ் பவர்கள்கூட நாளேடுகளை நடத்துவதற்கு திணறி வரு கின்ற இக்காலச் சூழலில், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் சீரிய வழிகாட்டுதலின்படி உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான 'விடுதலை' நாளேடு கம்பீரமாக வீறுகொண்டு எழுந்து நின்று இணையத்தின் வாயிலாக பீடுநடை போட்டுவருவதை அறிந்த உலகத் தமிழர்கள் அனைவரும் இன்பத்தில் திளைக்கின்றனர்.


வகைவகையான வண்ணங்களைத் தாங்கி பல் வேறு எண்ணங்களுடன் எத்தனை எத்தனை ஏடுகள் போட்டிபோட்டுக் கொண்டு வெளிவந்தாலும் அவை அத்தனையையும் பின்னுக்குத் தள்ளி, இனநலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு சீரிய சிந்தனை யோடு - லட்சிய வேட்கையோடு பகுத்தறிவு, சமூகநீதி, இடஒதுக்கீடு, மூடநம்பிக்கை ஒழிப்பு,  பெண்ணுரிமை மற்றும் கல்வி - வேலைவாய்ப்பு, ஜாதி ஒழிப்பு ஆகிய வற்றை முதன்மை நோக்கமாகக் கொண்டு வெளிவரு கின்ற உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு விடுதலை மட்டுமே!


- சீ. இலட்சுமிபதி,


தாம்பரம்.


- - - - -


ஆசிரியர் அய்யா அவர்களுக்கு வணக்கம்.


தாங்கள் விடுதலையில் அறிவித்தபடி "விடுதலை" வாசகர் விளைச்சல் பெருவிழா.


ஊரடங்கால் விடுதலை நேரிலே கிடைக்கப் பெறாமல் தவித்து வந்த வாசகர்கள் இன்று பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர் காரணம் விடுதலையை whatsapp மூலம் வாசகர்களுக்கு அனுப்பி வைக்கி றோம். அதோடு இல்லாமல் விடுதலையை மேலும் அதிகமான நபர்களிடத்தில் கொண்டு செல்லும் நோக்கத்தோடு கழகத்தின் பொதுச் செயலாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார் அவர்களின் ஆலோசனை கூறி புதிய செயலியை உருவாக்கி அதில் 256 நபர்களை இணைத்து புதிதாக ஒரு குழுவை உருவாக்க ஒரு திட்டத்தை வகுத்துக் கொடுத்தார்கள். அதன்படி மாற் றுக் கட்சி பொறுப்பாளர்களும் தோழர்களும் நண்பர் களும் உறவினர்களும் என ஒன்றாக இணைத்து இரண்டு குழுக்களை உருவாக்கினேன்.


அதோடு இல்லாமல் கழக பொறுப்பாளர்களையும் தோழர்களையும் ஒன்றாக இணைத்து ஒரு குழுவை உருவாக்கி இவர்கள் அனைவருக்கும் 'விடுதலை'யை உடனுக்குடன் அனுப்பி வைத்துள்ளேன் அதோடு மட்டுமல்லாமல் என்னுடைய அலைபேசியில் இருப துக்கும் மேற்பட்ட குழுக்கள் இருக்கின்றன அனைத்து குழுக்களுக்கும் 'விடுதலை'யை அனுப்பி வைத்தேன்.


இப்படி ஒரே நாளில் 2500க்கும் மேற்பட்ட தோழர் கள் 'விடுதலை'யை படிப்பதற்கு ஏதுவாக செயலாற்றி வருகிறேன் என்பதனை பெரு மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.


- ஜெ.புபேஸ்குப்தா


மாவட்ட செயலாளர் நாகப்பட்டினம்


No comments:

Post a Comment