ஒற்றைப் பத்தி - ‘‘ஆரியப் புரட்டு!'' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 26, 2020

ஒற்றைப் பத்தி - ‘‘ஆரியப் புரட்டு!''

திருநெல்வேலி மாவட் டம் மேலச் செவலிலிருந்து களக்காடு செல்லும் சாலை யில் 8 கி.மீ. தொலைவில் சிங்கி குளம் என்பது ஒரு சிற்றூர். ஊருக்கும் கிழக்கே நூறடி உயரமுள்ள ஒரு பாறை. ஆனாலும், அந்தப் பகுதியில் அதற்கு மலை என்றுதான் பெயர்.


அந்த மலையின் உச்சி யில் ஒரு சிறு கோவில். சாலையில் ‘‘அம்மன் கோவில் போகும் வழி'' என்று ஒரு விளம்பரப் பலகை; அரை கிலோ மீட்டர் நடந்தால், அந்தக் கோவிலுக்குச் செல்லும் 150 படிகள்.


தெற்கு வாசல் வழியாக உள்ளே நுழைந்தால், எதிரே இருப்பது பகவதி அம்மன் சன்னதி. அதற்கு மேற்கே கருவறையில் ஒரு தீர்த்தங் கரர் (சமணக் கோவில் - நேமிநாதர் என்ற 23 ஆம் தீர்த்தங்கரர்).


இந்த சமணக் கோவில் அந்தப் பெயரில் விளங்கு கிறதா என்றால், அதுதான் இல்லை. நேமிநாதரின் பணி மகள்தான் அம்பிகா. அந்த அம்பிகா இப்பொழுது அம் பிகாயாட்சி என்ற இசக்கியம் மன் கோவிலாகி - அதாவது இந்துக் கோவிலானது.


கோவில் கட்டப்பட்ட போது துணைச் சன்னதியாக இருந்த அம்பிகையின் சன் னதி முக்கியமான முதன் மைச் சன்னதியாகி மூல வரான தீர்த்தங்கரரின் கரு வறை துணைச் சன்னதியாக வும் மக்களால் வணங்கப் படுகின்றது என்பதுதான் கவனிக்கத்தக்கது.


இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், பணிமகள் அம்பிகாயாட்சி என்றும், பகவதி அம்மன் என்றும் அழைக்கப்பட்டு, வழிபடுவதுடன் நிற்க வில்லை.


மூலவர் சமண தீர்த்தங் கரரான நேமிநாதர் முனீஸ் வரர் என்ற பெயரால் வழங் கப்படுகிறார். பொங்கல் வைத்துப் படையல் போடு வது பகவதியம்மனுக்குத் தான்!


ஒரு சமணப் பள்ளி இந்துக் கோவிலாக எப்படி மாற்றப்பட்டுள்ளது பார்த்தீர் களா?


சாஸ்தா என்று புத்தர் அழைக்கப்பட்டார் - இது வரலாறு. இப்பொழுது ‘சாஸ்தா' என்று அய்யப்பன் அழைக்கப்படும் திரிபு களைக் கவனித்தால் ஆரி யத்தின் தரவுகளும், சூழ்ச் சிகளும், உருட்டல், புரட் டல்களும், திருவிளையாடல் களும் எத்தன்மையது என் பதை அறிந்துகொள்ளலாம்.


குறிப்பு: கோவிலுக்கு அரு கில் உள்ள ஒரு கல்வெட்டு உண்மையை அம்பலப்படுத் தியது. நூல் ஆதாரம்: ஆய்வாளர் தொ.பரம சிவனின் ‘‘விடுபூக்கள்''


 - மயிலாடன்


No comments:

Post a Comment