ஓய்வுபெற்ற பேராசிரியர்களை மீண்டும் பணி அமர்த்தக்கூடாது  - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 25, 2020

ஓய்வுபெற்ற பேராசிரியர்களை மீண்டும் பணி அமர்த்தக்கூடாது 

சென்னை,மே 25 தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள் தங்களின் பணிக்காலம் முடிந்ததும், கவுரவ விரிவுரையாளர்கள், தற்காலிக விரிவுரை யாளர்கள் என்று பல்வேறு பொறுப்புகளில் நியமிக்கப்படுவது வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது.


பல்கலைக்கழகங்களின் விருப்பத்தின் பேரில் கவுரவ விரிவுரையாளர்களாக ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டு வரும்நிலையில், வரும் கல்வி ஆண்டு முதல் ஓய்வு பெற்ற பேராசிரி யர்களை மீண்டும் பணியமர்த்த தடைவிதித்து, உயர்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுதொடர்பாக உயர்கல்வி துறை முதன்மை செயலாளர் அபூர்வா, உயர்கல்வி துறையின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்களின் பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக் கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-


பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள கற்பித்தல் பதவிகளில் ஓய்வு பெற்ற பேராசிரியர்களை மீண்டும் பணியமர்த்த சில பல்கலைக்கழகங்கள் முடிவு செய்து இருக் கின்றன. இது தகுதியான இளைஞர்களின் வேலைவாய்ப்புகளுக்கு இடையூறாக இருக் கும்.


எனவே, பல்கலைக்கழகங்கள் காலியாக உள்ள கற்பித்தல் பதவிகளில் ஓய்வுபெற்ற பேராசிரியர்களை மீண்டும் பணி அமர்த்தக் கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.


அண்ணா பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்ற பேராசிரியர்களை ஆலோசகர்களாக நியமித்ததற்கு, பல்வேறு பேராசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பது குறிப் பிடத்தக்கது.


No comments:

Post a Comment