யாரிந்த ஹர்ஷவர்தன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 25, 2020

யாரிந்த ஹர்ஷவர்தன்

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் உலக சுகா தார அமைப்பின் செயற்குழு தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார்.


ஏற்கெனவே மருத்துவ அறிவியலுக்கு முரணான பல விடயங்களில் முன்னணியில் உள்ளவர் இவர். கடுமையான விமர்சனங்கள் அவரைச் சுற்றி எழுந்ததுண்டு.


பசுமாட்டு மூத்திரம் மற்றும் பசுச்சாணியில் உள்ள உயிர்காக்கும் மருத்துவ குணத்தைக் கணடறியும்  ஆய்வுக்கமிட்டி ஒன்றை மத்திய அரசு மார்ச் 5-ஆம் தேதி அமைத்தது, அதற்குத் தலைவராக சுகாதாரத்துறை அமைச்சரும், எம்.பி.பி.எஸ். மருத்து வருமான ஹர்ஷவர்தன் நியமிக்கப்பட்டார்.


  விலங்குகளின் உடலில் இருந்து இயற்கையாக வெளியேறும் அனைத்துமே பயனற்றவை என்ப தும், அவை இயற்கையாகவே வளர்சிதை மாற்றம் பெற்று உரமாகப் பயன்படும் என்பதும் அறிவியல் முடிவு


 பசுமாட்டின் சாணி மற்றும் அதன் மூத்திரத்தில் உள்ள ஒருவகை வாசனையின் காரணமாக பூச்சி கள் வருவதில்லை என்றும், இந்த இரண்டுமே எக்காலத்திலும் கிருமிநாசினியாக பயன்படுத்த இயலாத ஒன்று என்றும் அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன.


 முக்கியமாக நோயுற்ற பசுமாட்டு மூத்திரத்தில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வைரஸ் காலரா மற்றும் டிபியை உருவாக்கும் பாக்டீரியங்கள் இருப்பதை பல முறை உறுதிசெய்துள்ளனர்.


 இவ்வாறாக இருக்கும் போது எம்.பி..பி.எஸ். படித்த மருத்துவரான இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் எப்படி இந்த ஆய்வுக்கமிட்டிக்குத் தலைவராக ஒப்புக் கொண்டார் என்பது மிகப் பெரும் கேள்வி!


2015-ஆம் ஆண்டு, மாட்டு மூத்திரத்தில் தயாரிக்கப்பட்ட கிருமி நாசினியை அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் பயன்படுத்தவேண்டும் என்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.


அதை விட ஒரு படி மேலே அப்போது ராஜஸ் தானில் ஆட்சியில் இருந்த வசுந்தரா ராஜே அரசு மாநிலத்தில் மருத்துவமனைகள், பள்ளிகள், இதர அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மாட்டுமூத்திர கிருமிநாசினியை பினாயிலுக்குப் பதிலாக பயன்படுத்தவேண்டும் என்று சுற்றறிக்கை விட்டது, உடனே மருத்துவர்கள் ஒன்று சேர்ந்து கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.


டில்லியில் உள்ள விகாஸ் பவன் என்ற தொழிலாளர் நல அமைச்சரகம் இருந்த பகுதியில் மாட்டுமூத்திர கிருமி நாசினி கொண்டுவந்த பார்சல் ஒன்று வண்டியிலிருந்து இறக்கும் போது அது தவறி விழுந்து பிளாஸ்டிக் கேன்களில் இருந்த மாட்டுமூத்திரம் எல்லாம் வழிந்தோடியது, அதன் நாற்றம் தாங்காமல் அலுவலகத்தைப் பாதி நாள் மூடினார்கள்.


அப்போது தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த இன்றைய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர் ஷவர்தன்  அறிவியல் கண்டுபிடிப்பான பினாயிலுக் குப் பதிலாக பசுமாட்டுமூத்திரம் பயன்படுத்த பரிந்துரை செய்தார்.  இப்போது இவர்தான் உலக சுகாதார அமைப்பிற்கான செயல் நிர்வாகியாக இந்தியா சார்பில்  நியமிக்கப்பட்டுள்ளார்.


இத்தகைய ஒருவர் உலகளவில் உள்ள சுகாதார அமைப்பிற்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார் என்பது நகைப்பிற்குரியதே!


No comments:

Post a Comment