நாகை மாவட்ட காணொலிக் கலந்துரையாடல்: ஊரடங்கலாம், ஒருபோதும் பெரியார் சிந்தனை அடங்காது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 24, 2020

நாகை மாவட்ட காணொலிக் கலந்துரையாடல்: ஊரடங்கலாம், ஒருபோதும் பெரியார் சிந்தனை அடங்காது

கழகத் துணைத் தலைவர் உரை



நாகப்பட்டினம், மே 24, திராவிடர் கழக நாகப்பட்டினம் மாவட்ட காணொலி கலந்துறவாடல் கூட்டம் ஏப்ரல் 27 ஆம் தேதி திங்கள் கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற்றது.


நாகை மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினரும், நாகை நகர தலைவருமான செந்தில்குமார் வரவேற்புரையாற்றினார். திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன், மாவட்ட செயலாளர் ஜெ.பூபேஷ் குப்தா ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். அப்போது, தங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து தோழர்களிடமும் கைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிவருவதாகவும், முகவரி சேகரித்தல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருதாகவும், கிராமப் பகுதிகளுக்குச் சென்று, கிருமு நாசினிகள் வழங்கியதாகவும் தெரிவித்தனர்.


கழகத் துணைத் தலைவர் உரை


திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேசும் போது, கரோனா பெருந் தொற்றால் ஊரடங்கலாம் ஆனால் பெரியார் சிந் தனை அடங்காது என்பதற்கு அடையாளமாக காணொலி மூலம் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்று வருகிறது.


தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள், சொற்பொழிவாளர்கள் மற்றும் கழக வழக்குரைஞரணி உள்ளிட்ட 4 கூட்டங்களில் காணொலி வாயிலாகப் பேசி, அவர்களும்  உற்சாக மூட்டி வருகிறார்.


இந்நிலையில், நமது தோழர்கள் பல மாவட்டங் களில் கலந்துறவாடல் கூட்டங்களை நடத்தி வரு கின்றனர். இந்த நேரத்தில், வாழ்வியல் முறைகளை நாம் சிக்கனமாக கையாள வேண்டும். தேவைக்கு செலவு செய்வதே சிக்கனமாகும்.


நியாயமாக பார்த்தால் மத்திய அரசு கரோனாவை கட்டுப்படுத்த தவறியிருக்கிறது. இன்றைய கேடு பாடான சூழலுக்கு மத்திய அரசே காரணமாகும். கடந்த ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி சீனாவில் கரோனா பெருந்தொற்று பரவியிது.


உலக சுகாதார நிறுவனம் ஜனவரி 18 ஆம் தேதி கரோனா பெருந்தொற்று உலகை பாதிக்கும் என அறிவித்தது.


ஜனவரி 30 ஆம் தேதி கேரளாவில் கரோனா தொற்று கண்டறியப்பட்டது. முதல் மாநிலமாக கேரளாவில் கண்டறியப்பட்ட நிலையில் அம்மாநில அரசு சிறப்பாக செயல்பட்டு கரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.


ரஷ்யா, வடகொரியா ஆகிய நாடுகள் பிப்ரவரி


7 ஆம் தேதி எல்லைகளை மூடியது. ராகுல் காந்தி பிப்ரவரி 12ஆம் தேதி இந்திய எல்லைகளை மூட வேண்டும் என அறிவுறுத்தினார். அதனை கேலி செய்தது மத்திய அரசு. அவர்கள் முழு எண்ணமும் மத்தியப்பிரதேசத்தில் காங் கிரஸ் ஆட்சியை கவிழ்த்து, பாஜக ஆட்சியை அமைப்ப திலேயே இருந்தது. அதன் பிறகே கரோனா பற்றி மத்திய அரசு வாய் திறந்தது. அதன் பிறகு அவசரமாக ஊரடங்கு எனும் ஆபத்தான போக்கை உருவாக்கியது என்றார்.


இந்த பிரச்சினைகளிலிருந்து நாம் மீள ஆசிரியர் வழிகாட்டுதல்களை படிக்க வேண்டும். நம் இயக்கத்தைப் பொறுத்தளவில் பிரச்சாரம், போராட்டம் என்பது கடிகாரத்தின் பெண்டுலம் போன்றதாகும். நாம் அரசியல் பக்கம் செல்லாமல், அரசியலில் யார் வர வேண்டும் என்பதை தீர்மானிக்கிறோம்.


பெரியார் கொள்கைகளில் அடிப்படை கொள்கை யாகவும், இன்றியமையாத கொள்கையாகவும் விளங் குவது ஏற்றத்தாழ்வாற்ற சமுதாயத்தை உருவாக்குவது தான். ஜாதியை பாதுகாக்கும் அரசியல் சட்டத்தை கொளுத்தும் போராட்டத்தை தந்தை பெரியார் அறிவித்த போது, அந்த போராட்டத்தில் அதிகளவில் பங்கேற்றவர்கள் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த தோழர்கள்.


அதேபோல் குலக்கல்வி ஒழிப்பு மாநாடும் நாகையில் நடத்தப்பட்டது. இதேபோல் விவசாய சங்கமும் முதன்முதலில் தொடங்கப்பட்டது நாகை யில் தான். எனவே, கழக வரலாற்றில் நாகை மாவட் டத்திற்கு தனி வரலாறு உண்டு.


கரோனா பரவல் கட்டுக்குள் வந்தவுடன் நாகை மாவட்டத் தோழர்கள் தனி பயிற்சி வகுப்புகளை நடத்தில் கழகத்தில் ஏராளமான இளைஞர்கள், மாணவர்களை இணைக்க வேண்டும். விவசாய சங்கத்தை புதுப்பிக்க வேண்டும். நாகை மாவட்டம் என்பது விவசாயத் தொழிலாளர்கள் நிறைந்த மாவட்டம். எனவே, தோழர்கள் இக்கட்டான இந்த சூழலில் சிக்கனமாக வாழ வேண்டும் எனக் குறிப்பிட்டார்.


கூட்டத்தில், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார், மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் நாத்திக பொன்முடி, மாவட்ட துணைச் செயலாளர் பாவா.ஜெயக்குமார், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மு.க.ஜீவா, திருத்துறைபூண்டி மாவட்ட செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர் ராச.முருகய்யன், மாவட்ட ஆசிரியரணி தலைவர் இரா.முத்துகிருஷ்ணன், மாவட்ட மாணவர் கழக செயலாளர் மு.குட்டிமணி, கு.சிவானந்தன், மாணவர் கழக பொறுப்பாளர் மு.இளமாறன், நாகை நகர இளைஞரணி தலைவர் சுரேஷ், திருமருகல் ஒன்றிய தலைவர் பொன்.செல்வராசு, கோவி.பெரியார்முரசு, திருக்குவளை பா.கவியரசன், கோலிலிச்செல்வன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். வி.சி.வில்வம் காணொலி மூலம் ஒருங்கிணைத்தார்.


நிறைவாக பெரியார் பெருந்தொண்டர் நத்தம் நாத்திகர் சி.பி.கண்ணு அவர்களுக்கு நினைவேந்தலும் வீரவணக்கமும் செலுத்தப்பட்டது. கூட்டத்தின் முடிவில் நாகை மாவட்ட மகளிரணி பொறுப்பாளர் கவிதா செந்தில்குமார் நன்றி உரையாற்றினார்.


No comments:

Post a Comment