தொண்டறச்செம்மல் அன்னை ஈ.வெ.ரா. நாகம்மையார் சிவகங்கை, புதுக்கோட்டை மண்டல மகளிரணி காணொலி கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 23, 2020

தொண்டறச்செம்மல் அன்னை ஈ.வெ.ரா. நாகம்மையார் சிவகங்கை, புதுக்கோட்டை மண்டல மகளிரணி காணொலி கருத்தரங்கம்

பேரா.ந.க.மங்கள முருகேசன் சிறப்புரை



காரைக்குடி மே 23- சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மண் டல மகளிரணி சார்பில் அன்னை ஈ.வெ.ரா.நாகம்மை யார் அவர்கள் நினைவு நாளை முன்னிட்டு காணொலி கருத்தரங்கம் 16.-5.-2020 அன்று மாலை நடைபெற்றது.


நிகழ்வுக்கு பொதுக்குழு உறுப்பினர் தி.செயலெட்சுமி தலைமை வகித்து உரையாற் றினார். பங்கேற்ற அனைவரை யும் பொதுக்குழு உறுப்பினர் சு.மணிமேகலை வரவேற்று பேசினார்.


பேராசிரியர் மு.சு.கண் மணி தொடக்கவுரையாற்றிட கழகத் துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி அறிமுக உரை நிகழ்த்தினார்.


தொண்டறச் செம்மல் அன்னை ஈ.வெ.ரா. நாகம்மை யார் என்ற தலைப்பில் திரா விடர் வரலாற்று ஆய்வு மய் யச் செயலாளர் பேரா.ந.க.மங் களமுருகேசன் சிறப்புரையாற் றினார்.


அவர் தனது உரையில் அன்னை ஈ.வெ.ரா. நாகம் மை யார் தந்தை பெரியாருடன் இணைந்து சமூக பணியாற்றிய தையும், பெரியாருடைய போராட்டங்களுக்கு ஆதர வாக செயல்பட்டதுடன் அதனால் அவருக்கு ஏற்பட்ட இன்னல்களை சந்தித்து போராட்ட வீராங்கனையாக திகழ்ந்ததையும் வரலாற்று குறிப்புகளோடு மிகச் சிறப் பாக எடுத்துரைத்தார்.


இந்த காணொலி கருத்த ரங்கில் கழகப் பொதுச்செய லாளர் தஞ்சை இரா.ஜெயக் குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், மற்றும் அவரது வாழ்விணையர் மணி மொழி, மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச் செல்வி, மாநில மகளிரணி அமைப்பாளர் குடியாத்தம் தேன்மொழி, புதுவை மாநில தலைவர் சிவ.வீரமணி, அமைப்புச் செயலாளர்கள் மதுரை வே.செல்வம், தரும புரி ஊமை.ஜெயராமன், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந் தூர்பாண்டியன், காரைக்குடி மாவட்டத் தலைவர் ச.அரங் கசாமி, இந்த காணொலி கருத்தரங்கில் ஒருங்கிணைப் பாளர் மாவட்டச் செயலா ளர் கு.வைகறை, புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் மு.அறி வொளி, மாவட்டச் செயலா ளர் பெ.வீரப்பன், அவரது வாழ்விணையர் வசந்தா, ந முணசமுத்திரம் தமிழன்பு, தலைமைக் கழகப் பேச்சாளர் தி.என்னாரெசு பிராட்லா, சிவகங்கை மாவட்ட தலைவர் உ.சுப்பையா, மாவட்டச் செயலாளர் பெ.ராஜாராம், இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் கோ.வ.அண்ணா ரவி, அவரது வாழ்விணையர் நாகவள்ளி, சிவகங்கை நகரத் தலைவர் இர.புகழேந்தி, காரைக் குடி மாவட்டத் துணைச் செயலாளர் இ.ப.பழனிவேலு, அவரது வாழ்விணையர் அமுதவள்ளி, திருப்பாச் சேத்தி வெ.அக்கினி, சாலைக் கிராமம் சேது.ஜெகதீசன், வடலூர் ரமாபிரபா ஜோசப், வேட்டவலம் பட்டாபிரா மன், மதுரை மண்டல தலை வர் மா.பவுன்ராசு உள்ளிட்ட அய்ம்பதுக்கும் தோழர்கள் பங்கேற்றனர்.


நிகழ்ச்சி வெகுசிறப்பா கவும் நேர்த்தியாகவும் அமைந் திருந்தது.


No comments:

Post a Comment