90 விழுக்காடு அரசுப் பணிகள் பார்ப்பன மயமே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 27, 2020

90 விழுக்காடு அரசுப் பணிகள் பார்ப்பன மயமே!

உ.பி.யில்  பாஜக ஆட்சியா? பார்ப்பனர் ஆட்சியா??



லக்னோ,மே27 பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பார்ப்பனர்களின் ராஜ்ஜியம் கொடி கட்டிப் பறக்கிறது. அரசுப் பணியிடங்களில் 90 விழுக்காடு பார்ப்பனர்களாகவும், உயர்ஜாதி யினராகவுமே உள்ளனர் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


மாநில சட்டம்- ஒழுங்கு நிர்வாகக் குழுவிற் கான அதிகாரிகள் நியமனத்தில் 312 பேரில் 152 பதவிகள் பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீத முள்ள பதவிகளில் பலதையும் உ.பி.முதல்வர் சாமியார் ஆதித்யநாத் தனது ஜாதியைச் சேர்ந்த தாக்கூர்களுக்கும், இதர உயர்ஜாதிகளுக்கு மட்டுமே கொடுத்துள்ளார்.  


கரோனா காலத்தில் நாடு சிக்கலில் இருந்து கொண்டு இருக்கும்போது, இந்த நெருக்கடியைப் பயன்படுத்தி மத்திய அரசும் அதற்கு துணை போகும் பாஜக மாநில முதல்வர்களும் அனைத் துப் பதவிகளிலும் பார்ப்பனர்களை நியமித்து வருகிறார்கள். ஜூலை மாதம் முதல் வாரம் சட்டம் ஒழுங்கு தொடர்பான நிர்வாகக் குழுவிற்கான பதவிகளுக்கான நியமன உத்தரவுகளை வழங்கி யுள்ளது. 


மாநிலம் முழுவதும்  40,000 வழக்குரைஞர்கள் மாநில அரசின் பல்வேறு பதவிகளுக்கான தகுதி யானவர்களாக இருந்தும் சாமியார் அரசு எவ்வித முன்னறிவிப்புமின்றி, தகுதியே இல்லாத பல பார்ப்பன வழக்குரைஞர்களை அதிகாரிகளாக நியமித்திருந்தது, இதில் ரேபரேலியில் சொத்துத் தகராறு ஒன்றில் கொலை செய்யப்பட்ட 5 பார்ப் பனர்களின் குடும்பத்தினருக்கும் பதவிகள் வழங் கப்பட்டுள்ளது. சட்டவிதிமுறைகள் எதையுமே பின்பற்றாமல் ஒற்றை உத்தரவில் வழங்கப்பட்ட பதவிகள் இதுதான் முதல்முறை என்பது குறிப் பிடத்தக்கது.


மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பான நிர்வாகக் குழு அதிகாரிகள் அய்ந்து பிரிவுகளாக உள்ளனர். இதில் தலைமை சட்ட அதிகாரி, சட்ட நிர்வாக ஆலோசகர்கள், துணை நிர்வாகக்குழு அதிகாரி, இணை நிர்வாகக்குழு அதிகாரி,  ஆலோசனை நிர்வாகி (பொது), ஆலோசனை நிர்வாகி(குற்றப் பிரிவு) என்ற பிரிவுகளில் நான்கு சட்ட நிர்வாகி ஆலோசகர்களில் மூன்று பேர் பார்ப்பனர்கள். ஒருவர் முதல்வரின் தாக்கூர் ஜாதி, 25 துணை நிர்வாகக்குழு அதிகாரிகளில் 13 பேர் பார்ப்பனர்கள், 103 ஆலோசனை நிர்வாகி களில் 58 பேர் பார்ப்பனர்கள் மற்றும் இதர அதி காரிகளில் 66 பேர்களில் 36 பேர் பார்ப்பனர்கள், மற்றும் சட்ட உதவி அதிகாரிகளுக்கான 114 பதவியிடங்களில் 42 பேர் பார்ப்பனர்கள் என அனைத்து மட்டத்திலும் பார்ப்பனர்களே நியமிக்கப்பட்டுள் ளனர்.


உத்தரப்பிரதேச மாநிலத்தில் இதர பிற்படுத்தப் பட்டவர்களின் எண்ணிக்கை 42 விழுக்காடு உள்ளது, அவர்களுக்கு வெறும் 5 விழுக்காடு மட்டுமே பதவிகள் வழங்கப்பட்டுள்ளது.


 இதில் பெரும்பாலான வழக்குரைஞர்கள் அனைவருமே பார்ப்பனர்களே. மொத்தமுள்ள 312 பேர்களில் 208 பதவிகள் பார்ப்பனர்கள் மற்றும் உயர்ஜாதியினர் தாக்கூர், பூமிகார், காயஸ் தாக்கள் மற்றும் வைசியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.


அரசின் இந்த நடவடிக்கை இதர பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதி என்று சமாஜ்வாடி கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் அரசை எதிர்த்து வருகின்றன. இந்த நிலையில், கடந்த ஜூன் 26ஆம் தேதி சொத்துத் தகராறு காரணமாக ஏற்பட்ட வன்முறையில் 5 பார்ப் பனர்கள் கொல்லப்பட்டனர். இதனால் மாநிலத் தில் பார்ப்பனர்கள் அரசின்மீது கடுமையான அதிருப்தியில் இருக்கின்றனர்.


 இந்த கொலை விவகாரம் தொடர்பாக கொலையுண்டவர்களின் குடும்பத்தினருக்கு ரூ 5 லட்சம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்று உறுதி அளித்திருந்தார் முதல்வர் ஆதித்யநாத். இதனை அடுத்து மாநில துணை முதல்வரான தினேஷ் சர்மா, முதல்வர் சாமியார் ஆதித்யநாத் இருவருமே பார்ப்பன வழக்குரை ஞர்களின் பட்டியலை வாங்கி அதில் உள்ள அனைத்து பெயரையும் தேர்ந்தெடுத்துள்ளனர். இதில் பலர் தகுதி இல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


 இது தொடர்பாக இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று கூறிய சமாஜ்வாடி கட்சித் தலைமை, கொலையுண்ட வர்கள் சொத்துத் தகராறு மற்றும் குடும்பச் சண்டை காரணமாகக் கொல்லப்பட்டனர். இது சட்டம் ஒழுங்கு தொடர்பான ஒன்றாகும்.  ஆனால், அரசு இந்த விவகாரத்தில் கொலையுண்டவர்கள் பார்ப்பனர்கள் என்பதால் மட்டுமே அவர்களுக்கு நிவாரணம் மற்றும் வேலை வழங்கியுள்ளது.


கொல்லப்பட்டவர்களில் 3 பேர் மீது பல கொலை வழக்குகள் மற்றும்  கொள்ளை வழக்கு கள் உள்ளன. ஆனால் அரசு அவர்கள் பார்ப் பனர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு பதவிகளை வாரி வழங்கியுள்ளது.


இது தொடர்பாக சட்ட அமைச்சரான பார்ப் பனர் பிரிஜேஷ் பாதக் கூறும்போது இத்தனை ஆண்டுகளாக பார்ப்பனர்மீது அநீதி இழைக் கப்பட்டு வந்தது, ஆனால் தற்போது சாமியார் அரசு பார்ப்பனர்கள்மீது கருணை கொண்டு அவர்களுக்கு பதவிகளை வழங்கியுள்ளது, இது ஒன்றும் பிச்சை அல்ல என்று கூறியுள்ளார்.


இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் தாழ்த் தப்பட்ட மக்கள் அதிகம் வாழும் மாநிலத்தில் பெரிய இனக்குழுவை புறக்கணித்துவிட்டு, பார்ப் பனர்களுக்கே அனைத்துப் பதவிகளும் வழங்கி யிருப்பது பாஜகவின் பார்ப்பனப் பாசத்தை வெளிப்படுத்தியுள்ளது.


No comments:

Post a Comment