ரூபாய் நோட்டுகளில் காந்தியாருக்குப் பதில் நாதுராம் கோட்சே: தலைமறைவான ஏபிவிபி நிர்வாகி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 24, 2020

ரூபாய் நோட்டுகளில் காந்தியாருக்குப் பதில் நாதுராம் கோட்சே: தலைமறைவான ஏபிவிபி நிர்வாகி


போபால், மே 24 மத்தியப் பிர தேசத்தில் பாஜகவின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி)-யில் நிர் வாகியாக இருப்பவர் சிவம் சுக்லா. இவர் தனது முகநூல் பக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு ஒரு படத்தை பதிவிட்டிருந்தார்.


அதில், பத்து ரூபாய் நோட்டுகளில் காந்தியாரின் படத்துக்கு பதில் அவரை கொலை செய்த நாதுராம் கோட்சேவின் படம் கிரா பிக்ஸ் முறையில் அச்சிடப் பட்டிருந்தது.


இதற்கு பல்வேறு தரப் பிலிருந்தும் கடும் கண்டனம் எழுந்தது. மேலும், அவரைக் கைது செய்யக் கோரி காங் கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சியினர் வலியுறுத்தினர்.


இதனிடையே, அவர் மீது காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் சிதி காவல் நிலையத்தில் புகார்அளித்தனர். ஆனால், காவல்துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யவில்லை எனக் கூறப் படுகிறது.


இதுகுறித்து காவல் ஆய் வாளர்எஸ்.எம். படேல் கூறும்போது, “முகநூலில் வந்த பதிவை வைத்து ஒருவர் மீது வழக்கு பதிவு செய்ய முடியாது. எனினும், இது குறித்து விசாரித்து வருகி றோம். தற்போது சம்பந்தப் பட்ட நபர் தலைமறைவாகி உள்ளார். அவரை தேடி வருகிறோம்'' என்றார்.


No comments:

Post a Comment