நோயற்ற மே நாளை எதிர்பார்த்து நம்பிக்கையுடன் வாழ்வோம்! வாழ்த்துவோம்!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 30, 2020

நோயற்ற மே நாளை எதிர்பார்த்து நம்பிக்கையுடன் வாழ்வோம்! வாழ்த்துவோம்!!

தமிழர் தலைவர் ஆசிரியரின் மே தின வாழ்த்து!


நாளை (மே 1 ) மேதினியெங்கும் கொண்டாடப்படும் மே நாள் என்ற தொழிலாளர் திருநாள்.


ஆனால், இந்த ஆண்டோ, கரோனா தொற்றின் கோரத் தாண்டவம் காரணமாக உலகத் தொழிலாளி வர்க்கம் மட்டுமல்ல, அனைவருமே ஊரடங்கிலும், வீட்டு முடங்கலிலும் அடைபட்டுள்ள தங்களையும், தங்களது குடும்பம், நாட்டு மக்களையும் காப்பாற்றும் கட்டாயக் கடமைக்கு ஆளாகியுள்ளார்கள். எனவே, இந்த மே தினம் துன்பத்தைத் தருவதாயினும், இது விரைந்து முடிந்து, வாழ்வாதாரம் தேடிடும் வறுமைப் போராட்டத்திலிருந்து விடுதலை பெற்று, வரும் மே தினத்தை மகிழ்ச்சியுடன் அனைவருக்கும் - நோயற்ற, வறுமையற்ற, வளமுள்ள ‘‘அனைவருக்கும் அனைத்தும்'' என்ற வாய்ப்புள்ள புத்துலக மே நாளாக கொண்டாட உறுதியேற்போம்! நம்பிக்கையை ஒரு நாளும் கைவிடோம்! அனைவருக்கும் மே தின வாழ்த்துகள்!


உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ!


 


கி.வீரமணி


சென்னை


தலைவர்,


30.4.2020


திராவிடர் கழகம்


No comments:

Post a Comment