மே 2இல் தமிழக அமைச்சரவை கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 30, 2020

மே 2இல் தமிழக அமைச்சரவை கூட்டம்

சென்னை, ஏப். 30-  தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில், வரும் மே 2 ஆம் தேதி தமிழக அமைச்சர வைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


கரோனா வைரஸ் அச்சு றுத்தல் காரணமாக நாடு முழுவதும் வரும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல் படுத்தப் பட்டுள்ளது. ஊர டங்கு அமல்படுத்தப்பட்டு 36 நாட்கள் ஆகியுள்ள போதி லும்,  கரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வந்தபாடில்லை. நாளுக்கு நாள் கரோனா வைரசால் பாதிக்கப்படுபவர் களின் எண்ணிக்கை அதிகரித் துக்கொண்டே செல்கிறது. இதனால், ஊரடங்கு  மேலும், நீட்டிக்கப்படுமா ? அல்லது சில தளர்வுகள் இருக்குமா? என்று மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


மே 3 ஆம் தேதியுடன் தேசிய ஊரடங்கு முடிவுக்கு வர உள்ள நிலையில், வரும் மே 2 ஆம் தேதி மாலை தமி ழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? மக்களுக் குத் தேவையான நிவாரண உதவிகள், அதற்கான திட்டங் கள், நிதியுதவிகள் அளிப்பதற் கான முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்படுமா என்று அரசிடம் எதிர்பார்ப்பு மக்க ளிடம் ஏற்பட்டுள்ளது.


 


No comments:

Post a Comment