சென்னை, ஏப். 30- கோவிட் வைரஸ் தாக்குதல் உள்ள இந்தக் காலத்தில் நல்ல உடல் நலனும், ஆரோக்கியமும் முக் கியமான அம்சமாக கருதப் படுகிறது.
எனவே இதைக் கருத்தில் கொண்டும், சூழலியலை மனதில் நிறுத்தியும் க்ரீவ்ஸ் காட்டன் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஆம்பியர் இரு சக்கர மின்சார வாகனங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.
சிறந்த சுகாதாரம், அதிக ளவிலான சேமிப்பு மற்றும் நல்ல சுற்றுச்சூழல் ஆகிய வற்றை அடிப்படையாகக் கொண்டே தனது பயணத்தை ஆம்பியர் மேற்கொண்டு வருகிறது. சமூகத்துக்கு நலன் பயக்கும் வகையில் சூழலுக்கு உகந்த பிரச்சாரத்தையும் முன்வைத்துள்ளது. அதாவது இணையதளத்தில் ரூ.999 என்ற விலையில் வாகனத்தை முன்பதிவு செய்யலாம். அனைத்து முகவர் கடை களிலும் இதற்கான எளிய முறை தவணை வசதி உள்ளது. ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் வாகனத்தை வாடிக்கையா ளர்கள் பெற்றுக் கொள்ள முடியும்.
இதனை வாடிக்கையாளர் கள் மட்டும் பெற்று பயன் அடைவதுடன், வணிக ரீதி யாகவும் முகவர்கள் அணுகிப் பயன் பெறலாம். வாகனம் குறித்த தனித்த அம்சங்கள், சலுகைகள், முன்பதிவு உள் ளிட்ட விவரங்களை www. ampere vehicles.com (https://amperevehicles.com/book-now-999 என்ற இணையதளத் தின் வழியே அறியலாம்.
No comments:
Post a Comment