இத்தாலியில் அனைத்து பள்ளிகளையும் மூட உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 6, 2020

இத்தாலியில் அனைத்து பள்ளிகளையும் மூட உத்தரவு


ரோம், மார்ச் 6- சீனாவின் ஹூபேய் மாகா ணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலாக விளங்கிவருகிறது.


கரோனா வைரஸ் பாதிப்பிற்கு சீனாவில் இதுவரை 3 ஆயிரத்து 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 80 ஆயி ரத்து 409 பேருக்கு வைரஸ் பரவுயுள்ள தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


உலகம் முழுவதும் கரோனா பாதிப் பிற்கு 3 ஆயிரத்து 200-க்கும் அதிகமா னோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 95 ஆயிரம் பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள் ளது.


இந்நிலையில், அய்ரோப்பிய நாடான இத்தாலியில் கரோனா தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 3 ஆயிரத்து 89 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக அந் நாட்டு சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வ மாக தெரிவித்துள்ளது.


கரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருவதையடுத்து இத்தாலியில் உள்ள அனைத்து பள்ளிகளையும் வரும் 15ஆம் தேதி வரை மூட அந்நாட்டு கல்வித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.


ஈரானில் பலி எண்ணிக்கை


 


100அய் தாண்டியது


சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ஹுபேய் மாகாண தலைநகர் வுகானில் கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அங்கு அதிக பாதிப்பு ஏற்பட்டதுடன் தொடர்ந்து உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின் றன. உலகம் முழுவதும் கரோனா வைரஸ் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள துடன், பலியானோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


சீனாவில் கரோனா வைரஸ் பாதிப் புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தை தாண்டியுள்ளது. மேலும், 90 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


சீனாவை தொடர்ந்து தென்கொரியா மற்றும் ஈரானில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஈரானில் இந்த நோயால் நேற்று வரை 92 பேர் உயிரிழந்தனர். வைரஸ் பாதிப்பு எண் ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இந்நிலையில், ஈரானில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு மேலும் 15 பேர் பலியாகினர். இதையடுத்து, பலியானோர் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது.


No comments:

Post a Comment